ஆட்டோ கட்டணம்-ஏன் இந்த முறைபாடு
சமிபத்தில் கேரளா சென்று இருந்தேன்.அங்கே ஆட்டோ கட்டணத்தை பார்த்தவுடன் என்னால் நம்பவே முடியவில்லை.ஓரு சில இடங்களுக்கு சென்ற பொழுது ஆட்டோ ஒட்டுனர்கள் கேட்ட தொகையை காடடிலும் நான் அதிகமாக தந்தேன் ஏனென்றால் அதே தொலைவு தமிழ்நாட்டில் நான் சென்று இருந்தால் அவர்கள் கேட்ட தொகையை காட்டிலும் குறைந்த பட்சம் 3 மடங்கு அதிகமாக கேட்டு இருப்பார்கள்.
![]() |
Kerala Auto |
![]() |
Karanataka Auto |
எங்களது ஊரில் நான் ரெகுலராக போகும் ஆட்டோவில் கூட கட்டணம் அதிகம் தான்.குறைந்த பட்ச கட்டணம் 30 ரூபாய் இங்கே.கேரளாவில் 15 ருபாய்க்கு கூட நான் சென்றேன்.அவர்கள் சொல்லும் கட்டணத்தில் நமக்கு பேரம் பேசவே மனசு வராது அந்த அளவு குறைந்த தொகை.
தமிழ்நாட்டில் பொதுவாக அனைத்து ஊர்களிலும் ஆட்டோ கட்டணங்கள் மிகவும் அதிகமாக தான் உள்ளது.எனக்கு தெரிந்த வரை எந்த ஊரிலும் மீட்டர் கட்டணம் வசூலிப்பதில்லை அவர்கள் சொல்வது தான் கட்டணம்.சென்னையில் ஆட்டோவில் பயணிப்பதை காடடிலும் கால்டாக்சியில்(பாஸ்ட் ட்ராக்)பயணிப்பதில் தான் கட்டணம் குறைவாக உள்ளது.சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் சொல்வது தான் கட்டணம் அதுவும் வெளியுர் காரர்கள் எனில் கட்டணம் மிகவும் அதிகமாக தான் சொல்கிறார்கள்.தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் ஆட்டோ கட்டணம் மிக அதிகம்.அதுவும் மழைக்காலங்களில் இவர்கள் கேட்கும் தொகையை கேட்டால் நெஞ்சுவலியே வந்துரும்.
![]() |
Tamilnadu Auto |
இந்தியாவைச் சுற்றிப் பார்த்த ஒரு வெள்ளைக்காரர் எல்லா ஊர் பற்றியும் ஒரு புத்தகமாகப் போட்டிருந்தார், அதில் சென்னையைப் பற்றிச் சொல்கையில் ஆட்டோக்காரர்கள் அதிகம் பணம் பிடுங்குவார்கள், ஜாக்கிரதையாக இருங்கள் என்று எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு பேர் போய் இருக்கும் இவர்கள் மீட்டர் போட்டு நான் பார்த்ததேயில்லை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜயா
நீக்கு