சனி, 4 ஆகஸ்ட், 2012

SETC,KSRTC ஆன்லைன் புக்கிங்-எப்ப SETC பாஸ் ஆகும்?.


SETC,KSRTC  ஆன்லைன் புக்கிங்-எப்ப  SETC பாஸ் ஆகும்?.


தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்  இரண்டிலும் ஆன்லைன் புக்கிங் வசதி உள்ளது.கர்நாடக அரசுப்பேருந்தில் 4 வருடத்திற்கு முன்பே ஆன்லைன் புக்கிங் வசதி தொடங்கப்பட்டது.தமிழக அரசுப் பேருந்தில் இந்த வருடம் தான் தொடங்கப்பட்டது.இரண்டு மாநில அரசுப்பேருந்துகளுக்கும் ரெடியன்ட் இன்போ நிறுவனம் தான் சாப்ட்வேர் தயாரித்து நிர்வாகித்து வருகிறது.


ஆனால்  KSRTC ல் நீண்ட தொலைவு பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கினால் அனைத்தும் ஆன்லைன் புக்கிங் கொண்டு வந்து கொண்டு உள்ளனர்.அத்துடன் புக்கிங் செய்யும் முறையும் பேருந்தை தேடும் முறையும் மிக எளிதாக உள்ளது.டிக்கெட் கேன்சல் செய்தால் நமது வங்கி கணக்கிற்கு 3 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படுகிறது.அவர்களின் வெப்சைட்டில் டிக்கெட் கேன்சல் செய்தால் எவ்வளவு திரும்ப கிடைக்கும் என்றும் இவற்றில் ஏதேனும் இடர்பாடு இருந்தால் யாரை தொடர்பு கொள்வது என்பதை மிக தெளிவாக தந்துள்ளனர்.பேருந்தும் நல்ல படியான பராமரிப்புடன் உள்ளது.தனியார் பேருந்தில் பயணம் செய்யும் திருப்தியை தருகிறது.


நமது தமிழகஅரசுப் பேருந்தில் ஆன்லைன் புக்கிங் சேவை மிகவும் மோசமாக உள்ளது.அரசு விரைவுப்பேருந்துக்கு மட்டும் தான் நாம் டிக்கெட் புக் செய்ய முடியும்.  SETC ல் கூட 30 சதவிதம் பேருந்துகளுக்கு தான் ஆன்லைன் புக்கிங் வசதி உள்ளது.கேன்சல் செய்யும் வழிமுறைகளை பற்றி எவ்வித தெளிவான தகவல்களும் வெப்சைட்டில் இல்லை.கஸ்டமர் கேர் நம்பர்க்கு போன் செய்தால் சரியான பதில் இதுரை எனக்கு கிடைத்தது இல்லை.நாம் புக் செய்த பேருந்து பிரேக்டவுன் என்றால் மாற்று பேருந்து ஏற்பாடு செய்யும் பொழுது கண்டக்டர்கள் ஆன்லைன் டிக்கெட் வைத்து உள்ளவர்களை மதிப்பது இல்லை.மொத்தத்தில்  SETC ல் ஆன்லைனில் புக் செய்து பயணத்தை முடித்து விட்டால் அது பெரிய சாதனை தான்.


நான் தேனியில் இருந்து சென்னைக்கு ஏசி பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தேன்.அன்று அந்த பேருந்து வரவில்லை அதற்கு எவ்வித மாற்று ஏற்பாடும் நிர்வாகம் செய்து தரவில்லை.நான் தனியார் பேருந்து முலம் எனது பயணத்தை தொடர்ந்தேன்.மறுநாள்  SETC அலுவலகத்தை தொடாபு; கொண்டால் சரியான பதில் இல்லை.நானும் எவ்வளவோ முயன்றேன் என்னால் பணத்தை திரும்பி பெறஇயலவில்லை.


SETC,KSRTC  இரண்டிலும் பேருந்து கட்டணத்தில் பெரிய வித்யாசம் இல்லை.அவர்களால் தரமான சேவையை தரும் பொழுது அனைத்து வசதியும் உள்ள தமிழக அரசால் தரமுடியாதது ஏன்?


பயணிகளுக்கு தரமான சேவையையும் ஆட்கள் தேவையை குறைக்க தான் அனைத்தும் ஆன்லைனில் கொண்டு வருகின்றனர்.ஆனால்  SETC முலம் டிக்கெட் புக் செய்வது என்பது நமக்கு பெரிய சுமையே. KSRTC  பேருந்தை பார்க்கும் பொழுது எல்லாம் இந்த மாதிரி தரமான பேருந்து  SETC  க்கு எப்ப வரும் என்று ஏக்கம் தான் அதிகமாக உள்ளது.நமது பேருந்தும் சரியில்லை புக்கிங் முறையும் சரியில்லை என்னைக்கு இவங்க மாறுவாங்க.  KSRTC   ரிசர்வேசன் சென்டர் அனைத்தும் கணணி முறையில் தான் உள்ளது.இன்னும் தமிழ்நாட்டில் 10 சதவிதம் கூட கணணிமையம் ஆகவில்லை.


இது தமிழக அரசு பேருந்து:

புதிதாக கழிப்பறை வசதியுடன் பேருந்தை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.அவர்கள் 3 வருடத்துக்கு முன்னுக்கு அறிமுகப்படித்திய மல்டி ஆக்சில் பேருந்தே இன்னும் தமிழக அரசு பேருந்தில  வரவில்லை என்பது மிகப்பெரிய கொடுமை.சந்தானம் பாணியில சொல்லனும்னா  SETC   இன்னும் வளரனும்பா.இவங்க எல்லாம் என்னைக்கு மறப்போறங்க.


இது கர்நாடக அரசு பேருந்து:

சேவைகள் பண்ண வேண்டிய அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்க தான் நேரத்தை செலவழிக்கின்றனர்.கொஞ்சமாவது மக்களுக்கு சேவை செய்தால் தமிழகம் எங்கோ சென்றுவிடும்.என்னைக்கு நமக்கு தரமான சேவை கிடைக்கும்?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக