திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ரம்ஜான்-இந்துவாகிய நான்

ரம்ஜான்-இந்துவாகிய நான்

இன்று ரமலான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அருமை மாமாக்களுக்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள்.எங்களது ஊரில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மாமன் முறை வைத்து தான் அழைத்துக் கொள்வோம்.அதனால் தான் அருமை மாமாக்கள் என்று கூறினேன்.

இன்று அரசியல் கட்சிகளும் சில மதத்தலைவர்களும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினை சண்டை ஏற்படுத்தி அவர்கள் லாபம் அடைய நினைக்கின்றனர்.ஆனால் அவர்களது முயற்சிகள் பெரிய அளவில் எதுவும் வெற்றி அடையவில்லை.நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.

ரமலான் நோன்பு கடைபிடிக்க ஆரம்பித்த முதல் நாள் முதல் தீவிர இந்துவாகிய நான் தினமும் நோன்பு கஞ்சி சாப்பிட்டுக்கொண்டு தான் உள்ளேன்.தினமும் மாலை நேரங்களில் எங்களது இல்லம் தேடி வந்து இஸ்லாமிய நண்பர்கள் நாள் தவறாமல் கஞ்சி அளித்தனர்.சைவத்தை கடைபிடிகத்தால் எங்களுக்காக தனியாக கஞ்சி தயாரித்தும் தந்தனர்.நாங்களும் தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் சுவிட் அனைத்தும் பரிமாறிக்கொண்டு அன்பை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இந்து குழந்தைக்கு உடம்புக்கு முடியவில்லை எனில் மசூதிக்கு சென்று மந்திரிப்பதும், இஸ்லாமிய குழந்தைக்கு முடியவில்லை எனில் இந்து கோவில்களில் மந்திரிப்பதும் தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்றுக் கொண்டு தான் வருகிறது.இரு சமுதாய மக்களும் அனைத்து விசயங்களிலும் ஒற்றுமையாக தான் உள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில் தான் மதங்களும் ஜாதிகளும் அதிகம்.இங்கே அனைத்து மத மக்களும் சமத்துவத்துடன் வாழ்கின்றனர்.அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது.சொல்லபோனால் இந்துவை காட்டிலும் மற்ற மதங்களுக்கு தான் இங்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இன்று பாகிஸ்தானில் இந்து மதம் முற்றிலும் அளிய கூடிய சூழ்நிலையில் தான் உள்ளது.ஆனால் இந்தியாவில் என்றும் அனைத்து மதமும் சமமாக தான் மதிக்கப்படுகிறது.தீவிரவாதத்தை ஊன்றி வளர்த்த பாகிஸ்தான் இன்று தீவிரவாதத்தாலயே அளிந்து கொண்டு வருகிறது.பணம் ஆசை காட்டி இளைஞர்களை தீவரவாதம் பக்கம் இழுத்தாலும் இந்தியாவை யாரலும் அழிக்க முடியாது.

வேலை இல்லாமல் சும்மா இருப்பவர்களும் மக்களின் ஒற்றுமையை பொறுக்காத சிலர்கள் ஆங்காங்கே வன்முறையை தூண்டினாலும் பெரும்பான்மையான மக்கள் அவற்றை என்றும் நம்புவது கிடையாது அவர்கள் தங்களது அமைதியான வாழ்க்கையை தான் விரும்புகின்றனர்.சபரிமலைக்கு 48 நாட்கள் விரதம் இருந்து செல்லும் பொமுது கூட நாங்கள் முதலில் செல்வது வாபரின் கோவிலுக்கு தான்.நபிகள் நாயகமும் விஷ்னுவும் கடமையை செய்யத்தான் சொல்லி உள்ளனர்.யாருக்கும் நம்மால் தீங்கு செய்யாத பொழுது தான் நம்மால் உண்மையிலேயே இறைவனை காணமுடியும்.மதம் என்ற போர்வையால் இந்தியாவில் கலவரத்தை யார் தீண்டினாலும் என்றும் வெற்றி காண முடியாது.நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகளே.எங்களது சொந்தங்களை தீவிரவாதம் மூலம் எங்களிடம் இருந்து பிரிக்காதீர்கள்.

மீண்டும் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக