வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஆன்ட்ராய்ட் கோல்மால் ஆபத்து


ஆன்ட்ராய்ட் கோல்மால் ஆபத்து

எதுக்கு எதுக்கு எல்லாம் சாப்ட்வேர் கண்டுபிடிக்கனும்னு இவங்களுக்கு விவஸ்தையே இல்லை.இப்ப மிகவும் பிரபலமாயிக்கிட்டு இருக்க ஆன்ட்ராய்ட் மொபைல வந்து இருக்குற இந்த புது வசதி எத்தனை பேருக்கு இதுவரை பிரச்சினை குடுத்து இருக்கு இன்னும் எத்தனை பேருக்கு தரபோகுதோ.விளையாட்டுத்தனமான இந்த சாப்ட்வேர் எவ்வளவு வினையை ஏற்படுத்தி இருக்குனு நக்கீரன் பத்திரிக்கைல வந்து இருக்ற   இந்த செய்தியை படித்து பாருங்கள்.
அந்த சாப்ட்வேரின் பெயர்:
call faker spoofer fone phreak
இதன் வசதி என்னவெனில் நாம் நண்பருக்கு அழைப்பு செய்யும் பொழுது அவரது மனைவி அல்லது வேறு நபரின் எண் தெரிந்து நாம் டயல் செய்யும் பொழுது அவ் எண்ணை நமது மொபைலில் இருக்கும் சாப்ட்வேர் மூலம் டயல் செய்தால்  அவரது மொபைலுக்கு நமது எண் செல்லாமல் நம் சாப்ட்வேர் மூலம் (மனைவி அல்லது வேறுநபர்) டயல் செய்த எண் செல்லும்.இதனால் மாபெரும் குழப்பங்களை ஏற்படுத்த முடியும்.விஞ்ஞான வளர்ச்சி மனித இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் போல.



2 கருத்துகள்:

  1. எந்த தொழில் நுட்பமும் நுகர்வோரின் பயன்பாட்டுக்கே உருவாக்கப்படுகிறது.அதனை குறுக்கு வழியில் உபயோகிப்பதில் நாம் ரொம்ப கெட்டிக்காரர்கள்.எண்கள் தவறி சில சமயம் தவறாக சென்று விடும்.ஒரு வேளை பெண்ணின் குரலாக இருந்தால் மறுபடியும் நூல் விட்டுப்பார்ப்பதும் அதற்கென்றே திரைப்படம் தயாரிப்பதையும் கூட செய்கிறோம்.

    தற்போது கற்றுக்கொள்ளவும்,நுகரவும் நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளன.நேர்வழியில் செல்வோம்.

    பதிலளிநீக்கு
  2. பரவாயில்லையே!பின்னூட்டம் போட்டவுடன் தொபுக்கடீர்ன்னு வந்து விழுகுது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு