ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் 2010 வரை நடந்த ஊழல் தொகை 910603234300000


இந்தியாவில் 2010 வரை நடந்த ஊழல் தொகை 910603234300000

சமிபத்தில் மத்திய தணிக்கை ஆணையம் சென்ற ஆண்டிற்கான ஆய்வறிக்கையை சமர்பித்தது.நிலக்கரிச் சுரங்களை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கயதில் 1,80,000  கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்துள்ளது.டெல்லி விமான நிலையத்தை தனியார்க்கு விட்டதின் மூலம் 25000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலே நாட்டை பெரிய அதிர்ச்சி உள்ளாக்கியது தற்சமயம் இவ் ஊழலும் சேர்ந்து அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

இணையத்தில் இவற்றை பற்றி தேடும் பொழுது கிடைத்த சில தகவல்களை இப்பதிவு முலம் பகிர்ந்து கொள்கிறேன்.போஸ்டர் இமேஜ் ஒன்று கிடைத்தது.சில ஊழல்களைப் பற்றி அவற்றில் அளித்துள்ளனர்.அதே போல் ஓரு வீடியோ காட்சியும் உள்ளது இவற்றை பாருங்கள்.இவற்றில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அதிகமாக மத்திய அரசை சார்ந்த ஊழல்களும் ,கண்டுபிடிக்கப்பட்ட ஊழல்கள் மட்டுமே.நமது கலைஞர் போல் விஞ்ஞான முறையில் செய்த ஊழல்களை எல்லாம் தொகுத்தால் நமக்கு நெஞ்சுவலியே வந்துரும்.ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஊழல்செய்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் நம் இந்தியாவில் இல்லை என்பது மிகவும் வருந்தக்கூடிய செய்தி.சட்டங்கள் கடுமையானல்தான் தவறு செய்பவர்கள் திருந்துவார்கள்.என்று கடுமையான சட்டம் வரும்.



2 கருத்துகள்: