திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கல் கொண்டாட்டம் தேவைதானா?

இன்று பொங்கல், அனைவரும் பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டும் குக்கரில் பொங்கல் வைத்தும் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு கொண்டாடுகிறோம்.

ஆனால் பொங்கலை உண்மையாக,மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய விவசாயிகள் யாரும் இந்த வருடம் பொங்கலை கொண்டாட முடியாமல் வேதனையுடன் உள்ளனர்.அவர்களது வேதனையை புரிந்து கொள்ள எந்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இல்லை.தமிழக அரசு பொஙகல் என்று அனைத்தையும் இலவசமாக தந்து சரக்கு வாங்குவதற்கு என்று நினைத்தோ 100 ருபாய் பணமும் அளித்து சந்தோசப்பட்டு கொண்டுள்ளது.திமுக வோ வழக்கம் போல தை 1 புத்தாண்டு என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டு உள்ளது.பிரதமரோ விவசாயத்தை நம்பாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமையாக செல்லுங்கள் என்று கூறுகிறார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டு ஆர்ப்பாட்ங்களோ,போரட்டங்களோ இல்லாமல், இருக்கும் தண்ணிரை வைத்து விவசாயம் செய்ய இன்றும் சென்று உள்ள விவசாயிகளை யார் காப்பாற்றுவார்கள்.படைத்த இறைவனும் இயற்கையும் கை விட்டு விட்டனர்,ஆட்சியாளர்களும் கைவிட்டனர்.எங்கே செல்வார்கள் அவர்கள்.விவசாயத்துக்கு நன்றி சொல்ல பொங்கலாம் விவசாயிகளை தவிர அனைவரும் கொண்டாடுவோம்.

பொங்கலைப் பற்றி பேஸ்புக்கில் வந்த என் மனதை பாதித்த கட்டுரை இது:

ஒரு விவசாயிக்கு மகனாய்ப்பிறந்து விசும்பியலும் விவசாயிகளுக்காக ஏதும் செய்யாத நான் பொங்கல் கொண்டாடும் தகுதியை இழந்துவிட்டேன். வெட்கித் தலைகுனிகிறேன். அத்துணை விவசாயிகளின் பாதங்கள் தொட்டு கேட்கிறேன் மன்னித்துவிடுங்கள்..

பொங்கலுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்லுறது ரொம்ப சந்தோசமாத்தான் இருக்கு. ஆனால் இந்தப் பண்டிகையை கொண்டாடும் முழு தகுதிப் படைத்த விவசாயிகள் எவருமே வாழ்த்துகளை பெற்றுக்கொள்ளும் நிலையிலோ, கொண்டாடும் மன நிலையிலோ இல்லவே இல்லை.

மாறாக திண்டாடும் நிலையில்தான் உள்ளார்கள். அவர்களது பெயரில் நாம் தான் வாழ்த்துக்கள் சொல்லிப் பினாத்துகிறோம். விவசாயம் என்பது ஒருவன் சம்பந்தப்பட்டதில்லை. அது ஒரு இனம். ஆனால் இனாமிற்கு உள்ள மரியாதைக்கூட எந்த விவசாயிக்கும் இல்லை. இது ஒன்றும் எவருக்கும் தெரியாத செய்தியில்லை.

அவர்களுக்கான நிரந்தரத் தீர்வை தராத அரசு கூட நூறு ரூபாயில் கொண்டாடச் சொல்லுகிறது. உலகுக்கே சோறுப் போட்டவங்களின் நிலை இதுதான். எவ்வளவு பெரிய பிழை செய்துக் கொண்டிருக்கிறோம் என்று இப்போது தெரியாது. அந்த நாட்களை நெருங்கிவிட்டோம்.

விளை நிலங்களை விலை நிலங்களாய் மாற்றிவிட்டு வீராப்பாய் ஒரு வாழ்த்து வேறு.

படித்த கவிதை:


மடைத்தண்ணி காணாமல்போனது
கடைத்தண்ணி தாராளமானது

எலிக்குதந்தாலும் தருவோம்
எலிக்கறி திண்பவனுக்கு தரமாட்டோம்.

பயிர்கள் வைத்த வயலில்
உயிர்கள் விழல்.

அகதி அரசியலனான்
விவசாயி அகதியானான்.

முத்துக்குமாரை தூக்கிப்பிடித்த போராளிகள்
வயல்காட்டை சுடுகாடாக்கிகொண்ட
அப்துல் ரஹீம்,ராஜாங்கம்,முருகையன்,செல்வராஜ்,ஸ்ரீதர்
ஆகியோரை  அனாதை  பிணமாக்கியதேன் ?

இவ்வளவு கேவலங்களையும் சுமக்கும் அரசு
ஒத்த பொட்டலம் அரிசியும்
ஒத்த நூறையும் தந்து
பொங்கல் கொண்டாடச் சொல்லுகிறது.

தமிழர்களின் தேசியவியாதி
மறதி  என்பதை மட்டும்
இந்த அரசும் ,வியாபாரிகளும் மறக்கவில்லை.
வெட்கக்கேடு.


சனி, 3 நவம்பர், 2012

நாங்க சோலாருக்கு மாறிட்டோம்:


நாங்க சோலாருக்கு மாறிட்டோம்:

அதிக நேர மின்வெட்டு, UPS கூட சார்ஜ் ஏற முடியாத அளவிற்கான மின்வெட்டு ஆகிய காரணங்களாலும் ,மின்சாரம் இல்லாமல் இயல்பு வாழ்க்கை பாதித்தபடியாலும் இனி அரசாங்கத்தை நம்பி பலன் இல்லை என்று
 செலவு ஆனாலும் பராவாயில்லை நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்யலாம் என்ற யோசனையில் சோலர் மின்சாரத்தை அலசி ஆராய்ந்து தற்சமயம் எனது வீட்டில் சோலர் மின்சார அமைப்பை அமைத்துள்ளேன்.

சோலர் மின்சார அமைப்பை வீட்டில் ஏற்படுத்தலாம் என்று ஒரு மாதக்காலமாக பல நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று விசாரித்ததில் ஏகப்பட்ட குழப்பங்களும், எது உண்மை என்று ஆராய்வதற்குள் தலைவலியே வந்துவிட்டது.
இதற்கு நடுவில் அரசாங்கம் வேறு நாங்கள் மானியம் தருகிறோம் என்று  மக்களை ஏமாற்றிக்கொண்டுஇருக்கிறது;.எல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாக சோலர் அமைப்பை எனது வீட்டில் நிறுவி விட்டேன்.

உண்மையிலேயே மாபெரும் வெற்றி.இரண்டு நாட்களாக புயலால் சூரிய ஒளியே இல்லாத பொழுதும் மின்சாரம் உற்பத்தி இருந்தது.தற்சமயம் மின் மோட்டர் மற்றும் வாசிங்மெசின் மட்டுமே மின்சாரம் மூலம் இயங்குகிறது.மற்ற அனைத்தும் சூரிய ஒளி மின்சாரம்  மூலம் இயங்குகிறது.


இவ்அமைப்பு மூலம் எனக்கு மாதம் 900 ரூபாய் சேமிப்பு எங்களால் அரசாங்கத்துக்கு 1300 ரூபாய் சேமிப்பு.

சோலர் மின்சாரத்தை பற்றி நான் தெரிந்து கொண்ட விபரங்களையும் எனது அனுபவங்களையும் வரும் பதிவுகளில் தெளிவாக கூறுகிறேன்.

Some Technical Details:
Solar Panel :200 watts panel*4
Inverter 00 va(Sukam)-7 years warranty
Battery:150 AH*2(Exide-Tubular)-5 Years Replacement Warranty
Charge Controller:40 a-24v
Daily Production:Minimum 4000 Watts
வியாழன், 25 அக்டோபர், 2012

தங்க நகைகளின் மீது முதலீடு லாபமா?-2


தங்க நகைகளின் மீது முதலீடு லாபமா?-2

இ-கோல்ட்:


Gold Exchange Trade Fund:

இம்முறையில் தங்கத்தை நாம் நேரடியாக வாங்காமல்  பங்குசந்தை மற்றும் மியுச்சுவல் பண்டு நிறுவனங்கள் முலம் அன்றைய சந்தை விலைக்கு வாங்கலாம்.இவற்றின் விலை 24 காரட் விலையாக இருக்கும்.1 கிராம் மற்றும் அரை கிராமாக வாங்கும் வசதி உள்ளது.வெளிமார்க்கெட்டில் உள்ள விலையை சார்ந்து தான் இதன் விலை மாறும்.

பங்குசந்தையில் இவற்றை வாங்குவதற்கு டீமேட் அக்கவுண்ட் தேவை.SIP முறையிலும் மாதம் தோறும் வாங்கலாம்.தங்கத்தை வாங்குவதற்கும் விற்பதற்கும் சேர்த்து அதிகபட்சமாக 1 சதவீதம் கமிசனாக செலவாகும்.நீங்கள் விற்றவுடன் பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கும் வசதி உள்ளது.

இவ்வாறு தங்கத்தை சேமிக்கும் பொழுது முற்றிலும் பாதுகாப்பு.
செய்கூலி சோதாரம் என்னும் ஏமாற்று வேலை கிடையாது.வாங்குவதும் விற்பதும் மிகவும் எளிது.

23 அக்டோபர் அன்று சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை 3105
23 அக்டோபர் அன்று சில கோல்ட் பண்டுகளின் விலை :

SBI Gold Exchange Trade Fund                   :3020
ICICI Prudential Gold Exchange Trade Fund:3080
Religare Gold Exchange Trade Fund            :3045
½ கிராம் தங்கத்தின் விலை:
Quantum gold fund                                      :1471

உங்களிடம் 300 ருபாய் தான் உள்ளது இதை வைத்து ஒரு கிராம் தங்கம் வாங்க முடியுமா?
சுத்தமான தங்க கட்டியை வெளிமார்க்கெட் விலையை காட்டிலும் குறைவாகவும் இருந்த இடத்தில் இருந்து பெறமுடியுமா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
செவ்வாய், 18 செப்டம்பர், 2012

பணத்தை இரண்டு மடங்காக்க

தலைப்பை பாத்ததும் என்னடா ஈமு கோழி போல புது மோசடியானு நினைச்சிறாதிங்க.இது அப்படி இல்ல,

Non-Convertible debenture:

RELIGARE FINVEST  நிறுவனம் 14 செப்டம்பர் முதல் ரூ500 கோடியை பொது மக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ,மியுச்சுவல் பண்டு நிறுவனங்களிடம் இருந்து திரட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கான வட்டி விகிதங்கள் 12.25 சதவீதம் முதல் 12.62 சதவீதம் வரை, 5 முதலீட்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.ரேட்டிங் நிறுவனங்களான கிரிசல்(CRISIL) மற்றும் இக்ரா(ICRA)நல்ல முதலீட்டு திட்டம் என்று பரிந்துரைத்துள்ளனர்.முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தில் அறிவித்துள்ளனர்.27 செப்டம்பர் உடன் திட்டம் முடிவடைகிறது.இத்திட்டத்தின் மூலம் திரட்டப்படும் பணம் கமர்சியல் லோன்க்கு பயன்படுத்தப்படுகிறது.

தங்கள் செய்யும் முதலீடு தங்களது வசதிக்கு ஏற்றாற்போல 3 மற்றும் 5 வருட காலங்களில்  செய்யலாம்.அதை போல வருட வட்டி அல்லது கூட்டு வட்டி முறைகளையும் தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.5 விதமான திட்டங்கள் உள்ளன.தேவைக்கு ஏற்றாற் போல தேர்வு செய்து கொள்ளலாம்.70 மாதங்கள் திட்டத்தில் இணைந்தால் உங்களது பணம் இரட்டிப்பு ஆகும்.செபி மற்றும் ரிசர்வு வங்கி இத்திட்டத்தை அனுமதிஅளித்துள்ளனர்.

திட்டத்தின்  முக்கிய அம்சங்கள்:
1.குறைந்த பட்ச முதலீடு:ரூ 10000
2.முக மதிப்பு:ரூ 1000
3.டிமேட் அக்கவுன்ட் இருக்க வேண்டும்.
4.தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது.
5.6 மாதத்திற்குள் பணத்தை எடுக்க இயலாது அதன் பிறகு தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம்.
6.டிமேட் அக்கவுன்டில் தான் முதலீட்டு தொகை இருப்பதால் அவசரம் எனில் 
நீங்கள் விற்ற மறு நாளே பணம் உங்கள்  வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
7.அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாக மற்றுமே நடைபெறுகிறது.

முதலீட்டு திட்டத்திற்கான முழு விளக்கங்கள்:

RELIGARE நிறுவனம் பற்றி:
நாட்டின் சிறந்த FINANCIAL  SERVICE  நிறுவனங்களில் 
ஒன்று.இன்சுரன்ஸ்,மியுச்சுவல்பண்டு ,சேர்புரோக்கிங்,காமடிட்டி,பைனான்ஸ், மெடிக்கல் மற்றும் பல துறைகளில் இவ் நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.போர்டிஸ் நிறுவனம் இவர்களது சகோதர நிறுவனம் ஆகும்.பேங்கிங் லைசன்ஸ்க்கு விண்ணப்பித்துள்ளனர்.இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

வங்கிகளில அதிகப்சமாக 11 சதவீதம் தான் வட்டி அளிக்கின்றனர்.   இந்நிறுவனம் 12 சதவீதத்திற்கு மேல் தருகிறது.உங்களது முதலீட்டை இந்நிறுவனத்துடன் இணைந்து 70 மாதங்களில் இரட்டிப்பாக்குங்கள்.
சிறந்த முதலீட்டு திட்டம்.
நிறுவனத்தின் இணையதளம்:http://www.religarefinvest.com

எங்கு விண்ணபிக்கலாம்:
அனைத்து பங்கு தரகு நிறுவனங்களிலும்,மியுச்சுவல் பண்டு நிறுவனங்களிலும்,ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்


சனி, 15 செப்டம்பர், 2012

தங்க நகைகளின் மீது முதலீடு லாபமா?


தங்க நகைகளின் மீது முதலீடு லாபமா?

தங்கம் 2001 ல் இருந்து தொடர்ந்து ஏறுமுகமாகத் தான் உள்ளது.இந்திய கலாச்சாரத்தில் தங்க நகைகளின் தாக்கம் மிகவும் அதிகம் என்பதால் தங்கத்தின் விலையை அனைத்து மக்களும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.தங்கத்தின் விலை ஏற்றம் நடுத்தர குடும்ப மக்களுக்கு மாபெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளதை யாரலும் மறுக்கமுடியாது.ஆனால் ஒரு மாபெரும் உண்மையை உணராமல் நகைகளின் மீது முதலீடு செய்து அனைவரும் மறைமுகமாக ஏமாந்து கொண்டு தான் உள்ளோம்.நான் ஏன் இவ்வாறு சொல்கின்றேன் என்பதற்கான விளக்கத்தை நான் கீழே தந்து உள்ளேன்.

இன்று நாம் வாங்கும் நகைகளுக்கு குறைந்த பட்சம் செய்கூலி,சேதாரம் மற்றும் அனைத்து செலவையும் சேர்த்து 10 சதவீதம் அதிகம் வைத்து தான் வாங்குகின்றோம்.நாம் வாங்கும் நகை 22 காரட் நகை தான்.இன்று மக்களால் மிகவும் அதிகமாக விரும்பப்படும் நகை மாடல்கள் எதிர்காலத்தில் விரும்பபடுவதில்லை.அன்றைய காலத்தில் உள்ள நகையின் மாடல்களாக மாற்ற பழைய நகையை போட்டு புதிய மாடலாக மாற்றுவதற்கு அன்றைய விலை நிலவரப்படி குறைந்த பட்சம் கிராமிற்கு ரூ 200 கழித்து தான் பழைய நகைகளை விலைக்கு எடுக்கின்றனர்.அப்புறம் புது நகையை செய்வதற்கும் செய்கூலி சேதாரம் வேறு தனி. குறைந்த பட்சம் நாம் தங்க நகையின் மீது முதலீடு செய்த தொகை நம்மை அறியாமலே குறைந்த படசம் 30 சதவீதம் குறைந்து விடுகிறது என்பதை யாரலும் மறுக்க முடியாது.நீங்கள் இன்று 1 லட்சம் முதலீடு செய்தால் அதன் உண்மையான விலை 70 ஆயிரம் தான்.ஓரு வேலை மாடல் மாற்ற வில்லை என்றாலும் 20 சதவீதம் குறைந்து தான்இருக்கும்.

அது மட்டும் இல்லாமல் நகையை பாதுகபாப்பது என்பது தற்சமயம் சிரமம் அதிகம்.அத்துடன் சரியாக நகையை பராமரிக்க முடியவில்லை எனில் அனைத்து நகைகளும் கருக்க ஆரம்பித்து விடும்.


தங்கத்தின் விலை ஏறிக்கொண்டு போகிறது இல்லை கொஞ்சம் கொஞ்சமாக நகையை சேர்க்கலாம் என்றவர்கள் அப்புறம் எவ்வாறு தங்கத்தை வாங்குவது அதற்கான வழிமுறைகளை எனக்கு தெரிந்த விபரங்களை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
1.E-GOLD – தேசிய பங்கு சந்தை மற்றும் மியுச்சுவல்பன்டு நிறுவனங்கள் இவற்றை வழங்குகின்றன.

2.தங்க கட்டி:அனைத்து நகை கடைகளிலும் கிடைக்கும் 24 கிராம் தங்கம்.

3.தங்கக் காசு.அனைத்து வங்கிகள் மற்றும் நகைகடைகளில் கிடைக்கும்

புதிவின் நீளம் கருதி இத்துடன் இப்பதிவை முடிக்கிறேன்.மேற்கண்ட முதலீடு திட்டங்கங்களையும் அதன் சாதக பாதகங்களையும் ஏன் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது என்பதையும்  வரும் பதிவுகளில் விபரமாக எடுத்துறைக்கின்றேன்.


வெள்ளி, 14 செப்டம்பர், 2012

கனவெல்லாம் நீ தானே:அருமையான ஆல்பம்

கனவெல்லாம் நீ தானே:அருமையான ஆல்பம்

யு டியுப் ல ஒரு பாட்டு கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுது அதுல கனவெல்லாம் நீ தானே னு போட்டு ஒரு வீடியோ இருந்தது சரி கேட்டு பார்க்கலாம்னு கேட்டு பார்த்தேன்.ஒரு பத்து தடவைக்கு மேலயாவது திரும்பி திரும்பி கேட்டு இருப்பேன்.நெட்ல இந்த பாட்ட ஆடியோ வடிவுல தேடி கண்டு பிடிச்சு டவுன்லோட் பண்ணி பல தடைவ கேட்டுக் கிட்டு தான் இருக்கேன்.நல்ல பாடல் நல்ல வரிகள்.காதல் அனுபவத்தையும் அதன் வலியையும் மிக அருமையாக எழுதி பாடியிருக்கார் தீலிப் வர்மன்.ஒரு தடைவ கேட்டு பாருங்க.இந்த ஆல்பம் 2009 லேயே வந்து இருக்கு நான் இப்ப தான் கேட்டன் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு.அனுபவிச்சு பாடியிருக்காரு.கேட்டு பாருங்க


எனக்கு பிடித்த சில வரிகள்:
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அலைகிறதே,உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்

தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழித்திருந்தேன்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

நீ தானே என் பொன்வசந்தம் -இசை விமர்ச்சனம்


நீ தானே என் பொன்வசந்தம் -இசை விமர்ச்சனம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல பாடல்களை கேட்ட திருப்தியை எனக்கு நீ தானே என் பொன்வசந்தம் இசை அளித்தது.அனைத்து பாடல்களும் கேட்க மிக நன்றாக உள்ளது.பிடிக்கலை மாமு என்ற பாடலை தவிர்த்து ஆனாலும் இப்பாடலின் ஆரம்ப இசை மிக நன்றாக உள்ளது.

1.காற்றை கொஞ்சம்:
மிக அருமையான கம்மிங்கோட ஆரம்பிக்கும் பாடல் கார்த்தி மிக ரசித்து பாடியுள்ளார்.பாடல் வரிகள் கேட்கும் படியாக அருமையான இசை.மனதை விட்டு மாறாத பாடல்.அருமையான வரிகள்.இடையில் வரும் பெண்குரல் கம்மிங் மிகவும் அருமை.

2.முதல் முறை:
மிக அருமையான பெண்குரல்.பாடியவர் சுனிதி சவுகான்.அருமையான வயலின் இசை.மிக நல்ல வேகமான இசையுடன் குரல் ஒலிப்பது மிக அருமை.

3.சாய்ந்து சாய்ந்து:
யுவனின் அருமையான குரலோடு ஆரம்பிக்கும் அருமையான பாடல்.வார்த்தைகளை மிக தெளிவாக கேட்கும் படியான அமைதியான இசை.பாடல் வரிகள் மிக அருமை

4.சற்று முன்பு:
மிக அருமையான குரலுக்கு சொந்தக்காரர் NSK அவர்களின் பேத்தி ரம்யா.மிக அருமையான பாடல்.கதாநாயகியின் ஏக்கத்தை மிக அருமையாக பாடல் வெளிப்படுத்துகிறது.எனக்கு மிக பிடித்த பாடல்.ஆர்பரிக்காத அமைதியான இசை.

5.என்னோடு வா:
அருமையான இசையால் ஆரம்பிக்கும் பாடல் கார்த்தியின் அருமையான குரல் பாடலின் தரத்தை மேலும் சுவையுள்ளதாக்கி உள்ளது.அருமையான காதல் வரிகள்.மெல்லிய இசை.

6.வானம் மெல்ல.
இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் பாடல்மிக அருமையான வயலின் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல்.இளையராஜாவை தவிர்த்து வேறு ஒருவர் பாடியிருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும்.கேட்கும் படியான பாடல்.இசை அருமை.

7.பெண்கள் என்றால்.
யுவன் பாடியுள்ள பாடல்.மிக அருமையான இசை.வித்தியசமான இசை காதல் தோல்வி பாடலை வித்தியசமாக அளித்துள்ளனர்.

8.பிடிக்கலை மாமு:
இந்த ஆல்பத்தில் எனக்கு பிடிக்காத பாடல்.ஆனாலும் இசை நன்றாக உள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல பாடல்களை கேட்ட திருப்தியை இப்படம் அளித்துள்ளது.நீங்களும் கேளுங்கள்.உங்களுக்கும் பிடிக்கும்