திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மாற்றான்-இசை விமர்ச்சனம்


மாற்றான்-இசை விமர்ச்சனம்

ஹரிஸ்ஜெயராஜ், சூர்யா,கே.வி.ஆனந்த் மீண்டும் கூட்டனியில் வரும் படம் மாற்றான்.இதன் ஆடியோ சிங்கப்பூரில் வெளியிட்டுள்ளார்கள்.படத்தை பார்க்றது ,கட்அவுட் வைக்றது எல்லாம் அப்பாவி தமிழன்கள் ஆனால் ஆடியோ வெளியீடு வெளிநாட்டில்.வாழ்க தமிழ்.


இசை விமர்ச்சனம்:

1.ரெட்டைக் கதிரே- அறிமுக பாடல் போல.வழக்கமான ஹரிஸ் இசை.பல பாடல்களில் கேட்ட இசை தான்.சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.

2.நானி கோனி : நல்ல மெலடி பாடல்.கேட்க நன்றாக உள்ளது.அயன் பாடல் பாதிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை.நல்ல பாடல்

3.தீயே தீயே: நல்ல பாடல்.இசை நன்றாக உள்ளது.வழக்கான ஹரிஸ் இசை.புதிதாக ஒன்றும் இல்லை.

4.யாரோ யாரோ:7ம் அறிவில் வரும் யம்மா யம்மா பாடலை வார்த்தைகளை மாற்றி கேட்பது போல் உள்ளது.

5.கால் முளைத்த பூவே:பாடலின் தொடக்கம் மிக நன்றாக உள்ளது.மதன் கார்க்கின் வரிகள் நன்றாக உள்ளது.பழைய பாடல்கள் கம்மிங் நடுவில் வருவது ரசிக்கும் படியாக உள்ளது..

நானி கோனி பாடல் மிக நன்றாக உள்ளது.தீயே தீயே, கால் முளைத்த பூவே பாடல்கள் ரசிக்கும் படியாக உள்ளது

மாற்றான் இசை எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை.ஒரே மாதிரியான இசை ஹரிஸ் எப்ப வசீகரா, உயிரின் உயிரே மாதிரி தரப்போறீங்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக