திங்கள், 27 ஆகஸ்ட், 2012

கேவலமான (ஆபாசமான) விளம்பரங்கள்...தேவைதானா?


கேவலமான (ஆபாசமான) விளம்பரங்கள்...தேவைதானா?

விளம்பரம் எடுக்குறோம்னு இவ்வளவு கேவலமா எல்லாம் யோசிக்ககூடாது.இவங்க பாடிஸ்பிரே உபயோகிச்ச ஊர்ல இருக்ற பெண்கள் எல்லாம் பின்னுக்க வருவாங்களாம்.எவ்வளவு கீழ்த்தரமான விளம்பரங்கள்.இந்த விளம்பரங்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் வருது இதை எப்படி குடும்பத்தோட பார்க்க முடியும் இதை விட கொடுமை சுட்டி டிவியில கூட விளம்பரம் வருது சின்ன குழந்தைகளுக்கு இதை பத்தி என்ன தெரியும்.இப்பவே பசங்க மனசை திசைதிருப்புற இந்த மாதிரி விளம்பரங்களை தடுக்க அரசாங்கம் யோசிக்காலமே.இவை அனைத்தும் சென்சார் செய்யப்பட்டவையாம்.


நீங்களே பாருங்க வீடியோவை:













10 கருத்துகள்:

  1. பாலியலை வியாப்பாரப் படுத்துதலை நாமும் வன்மையாக எதிர்க்கின்றோம். ... குறிப்பாக பெண்களை அவமானப்படுத்தும் விளம்பரங்களே மிக அதிகமாக உள்ளன !!!

    இந்த தளத்தில் இவைப் போன்ற பாலியல் வியாபாரத்தனத்துக்கு எதிராக எழுதி வருகின்றார்கள். கவனிக்கவும் !

    http://masessaynotosexism.wordpress.com

    பதிவுக்கு நன்றிகள் !

    பதிலளிநீக்கு
  2. பெண்களை போகப்பொருளாக மட்டுமே பயன்படுத்தினாலும், அதில் பெருமை கொள்ளும் அடிமைகளாகத்தான் நுனிநாக்கு ஆங்கில அழகிகள் இருக்கிறார்கள்..இந்த பதிவை பாருங்க தல
    http://marmayogie.blogspot.in/2010/03/blog-post_07.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி,உங்களது பதிவு மிக அருமை

      நீக்கு
  3. சினிமாவுக்கு உள்ளது போல
    டிவி சீரியல்கள், விளம்பரங்கள்
    எல்லாவற்றுக்கும் சென்ஸார் செய்து
    (சின்னத்)திரையிட அனுமதி
    வழங்க வேண்டும்.

    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  4. பெண்களை ரத்தமும், சதையும், மலமும், சலமும் கொண்ட சக மனுசியாகப் பார்க்காமல் - ஒரு பண்டமாக, பொருளாகப் பார்க்கும் நமது பழமைக் கலாச்சாரத்தின் பிரதிப்பலிப்பே இவை !!! மாற்றங்கள் நம்முள் இருந்தும் வரவேண்டும் .. பெண்களே இவற்றை எதிர்க்காமல் மௌனித்து இருப்பது தான் அவர்களுக்கு ப்ளஸ் பாய்ண்டாக அமைகின்றது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி உங்களது பதிவு மிக அருமை

      நீக்கு