செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

விலைவாசி குறைந்துள்ளதாம்-அண்டப்புழுகு மத்திய அரசு


விலைவாசி குறைந்துள்ளதாம்-அண்டப்புழுகு மத்திய அரசு

இன்று ஜீலை மாத INFLATION ஜ மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.6.87 என்று அறிவித்துள்ளது அதாவது 2010 ஜனவரியில் இருந்த அதே அளவு தான் இப்பொழுது உள்ளதாம்.

இதே ஜீலை மாதத்தில் தான் சர்க்கரை விலை 30  ரூபாயில் இருந்து 40  ரூபாய்க்கு சென்றது.அரிசி விலை 25 கிலோ மூடை 900 ரூபாயில் இருந்து 1050 க்கு சென்றது.அனைத்து காய்கறி விலைகளும் 20 முதல் 30 சதவிதம் உயர்ந்துள்ளது.ஆனால் மத்திய அரசு கொடுத்த புள்ளி விபரம் விலைவாசி உயர்வு 6.87 சதவீதம் என்று.புள்ளி விபரங்களை சொல்லி வெளிநாட்டில் உள்ளவர்களை ஏமாற்றலாம் தினமும் விலைவாசி உயர்வை அனுபவிக்கும் மக்களை ஏமாற்ற முடியுமா?

இன்று இப் புள்ளி விபரங்கள் வெளியானதும் பங்குசந்தை நல்ல முன்னேற்றம் கண்டது.அனைத்து துறை வல்லுனர்களும் அரசை குறை தான் கூறுகின்றனர்.ஆனால் மாண்டேசிங் அலுவாலியா விலைவாசி குறைவை வரவேற்கிறேன் என்று பேட்டி தருகிறார்

பொய்யான புள்ளி விபரங்களை தருவதற்கு பதிலாக விலை வாசி குறைய வழியை தேடுங்கப்பா.நம்ம சிதம்பரம் நிதி அமைச்சர் ஆனாலே எல்லாமே அரசுக்கு சாதகமாக இருக்குனு நிறைய பொய் பொய்யா பேசுறாருங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக