வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஈமு வெடித்தது-ஓரு பாளோஅப்


ஈமு வெடித்தது-ஓரு  பாளோஅப்

நான் ஈமு பதிவு போட்ட நேரமோ என்னமோ தமிழ்நாட்டின் பெரிய ஈமு பண்ணை என்று அறிவித்துக் கொண்ட சுசி ஈமு பார்ம்ஸ் நிர்வாகத்தினர் ஒட்டம் பிடித்துள்ளனர்.பல நிறுவனங்களும் ஒட்டம் பிடித்துள்ளன.
வழக்கம் போல் ஏமாந்த மக்கள் நிறுவனத்தின் முன் கூடி பணத்தை திரும்ப தரக்கோரி கோஷம் போட்டுள்ளனர்.அத்துடன் காவல்துறையும் வழக்கு பதியப்பட்டு சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் கொடுத்து ஏமாத்திக்கொண்டு இருந்த பொழுது கண்டுக்காத அரசு இப்பொழுது சொத்து விபரங்களை சேமித்து நடவடிக்கை எடுக்க போகிறதாம்.சொத்து விபரத்தை சேகரித்து பாசி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் கமிஷன் வாங்கியது போல் ஈமுவிலும் காவல்துறை அதிகாரிகள் வாங்கப்போகின்றார்களோ என்னமோ?

தவறுகள் நடப்பதற்கு முன்னால் அதை தடுப்பதற்கு தான் அரசும் காவல்துறையும்.ஆனால் நம் அரசும் காவல்துறையும் தவறு நடந்த பிறகு தான் யோசிக்கவே செய்கின்றனர்.உயிரோடு இருக்கும் பொழுது கவனிக்காமல் இறந்த பிறகு போஸ்ட் மார்டம் செய்து எதனால் இறந்தார் என அறிக்கை தருவது போல் தான் உள்ளது அரசு செயல்.

இந்த விளம்பரத்தில் நடித்து மக்களை ஏமாற்ற துணை போன நடிகர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்.அதுவும் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமாரின் பதில் என்ன?.பணம் கொடுத்தால் எதில் வேண்டும் என்றாலும் நடிப்பார்களோ?

விதவிதமாக யோசித்து ஏமாற்ற நினைப்பவர்கள் ஒரு பக்கம் அதை நம்பி கஷ்டப்பட்ட பணத்தை ஏமாறும் மக்கள் ஓரு பக்கம்.என்று தான் திருந்துவார்கள் இவர்கள்?

தினமலரில் வந்த செய்தி இது:




2 கருத்துகள்:

  1. இது போன்ற செய்திகளை வலைத்தமிழ் என்ற இணையதத்தில் பார்த்தேன் மிகவும் அருமை.உங்களுக்கு பயன்படும் என்று நம்புகின்றேன் http://www.valaitamil.com/news-category154.html

    பதிலளிநீக்கு