புதன், 1 ஆகஸ்ட், 2012

என் மனம் ஏன் இப்படி


என் மனம் ஏன் இப்படி


சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையான்டால் அன்றைக்கு அனைத்து வேலையையும் விட்டு விட்டு டிவியில் கிரிக்கெட் பார்ப்பதும் அவர் விளையாடவில்லை எனில் வேலையே இல்லாமல் இருந்தாலும் கிரிக்கெட் பார்ப்பதில்லையே ஏன் நான் இப்படி.
சேவக் 200 ரன் எடுக்கும் பொழுது அவுட் ஆகனும் சச்சின் சாதனையை ஒடைக்க கூடாது என சாமியை வேண்டினேன் ஏன்?,சச்சின் 50 ரன் எடுத்தால் கொண்டாடும் மனம் மற்றவர்கள் மாபெரும் சாதனை பண்ணினாலும் செய்தியாக மட்டுமே பார்க்கிறதே.


இளையராஜாவின் பாடல்களை மிகவும் அதிகமாக நேசித்து ரசிப்பதால் என்னால் ரகுமானுக்கு ஆஸ்கார் கிடைத்த பொழுது இளையராஜா இதை காடடிலும் அழகான பாடல்கள் குடுத்தும் அவருக்கு கிடைக்கவில்லையே என கவலைபட்டது ஏன்.காரணமே இல்லாமல் ரகுமான் பாடல்களை குறை சொல்வது ஏன்.


காலாநிதிமாறனின் அழகான திறமையினால் ஏந்பட்ட தாக்கத்தால் விஜய் டிவியை வெறுத்தது ஏன்.


நான் உபயோகப்படுத்தும் 2 வீலர் மொபைல்தான் சிறந்தது என நினைப்பதும் நண்பர்களிடம் பெருமை பட்டு கொள்வதும் ஏன் என்று எனக்கு தெரியவில்லை.


1000 ருபாய் தேவையில்லாமல் செலவழித்தாலும் 10 ருபாய் காணாமல் போனால் அதையே நினைத்து கவலைப்படுவதும் ஏன்?


ரத்த சொந்தங்கள் நண்பர்கள் இறந்தால் வருத்தப்படும் மனம் மற்றவர்களின் மரணத்தை சாதரணமாக எடுத்து கொள்வது ஏன்?


இன்னும் நிறைய ஏன் கேள்விகள் எனக்கு எதற்கும் விடை தெரியவில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக