செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ரயில் பயணம்-அடையாள அட்டை கட்டாயம்


ரயில் பயணம்-அடையாள அட்டை கட்டாயம்

2 ம் வகுப்பு முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும் அனைவரும் அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.ஏற்கனவே ஏசியில் பயணிப்பவர்களுக்கும் ,இ டிக்கெட் ,தக்கல் டிக்கெட்டிற்கு அடையாள அட்டை அவசியம் என்பது நடைமுறையில் உள்ளது.அடுத்த மாதம் முதல் முன்பதிவு செய்து பயணிக்கும் அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் புதிய முறை நடைமுறைக்கு வந்தால் டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.புகைப்படத்துடன கூடிய ஓரிஜினல் அடையாள அட்டை பயணத்தின் பொழுது கொண்டு செல்ல வேண்டும்.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் எனில் யாரேனும் ஓருவர் அடையாள அட்டையை கொண்டு சென்றால் போதுமானது.

மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்,.பள்ளி ,கல்லுரி அடையாள அட்டைகள், வங்கி பாஸ்புக் ,புகைப்படத்துடன் கூடிய ATM கார்ட்கள் ,டிரைவிங் லைசன்ஸ் ,மாதந்திர ரயில்வே பாஸ் அட்டை ஆகியவை அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அடுத்த முறை ரயிலில் பயணிக்கும் பொழுது அடையாள அட்டை எடுத்துட்டு போக மறக்காதீங்க.மறந்திங்கனா அபராதம் கட்டனும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக