செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

டெசோ மாநாடு-நானும் ரவடி ஜெயிலுக்கு போறேன்-சில கார்ட்டுன்கள்


டெசோ மாநாடு-நானும் ரவடி ஜெயிலுக்கு போறேன்-சில கார்ட்டுன்கள்

ஆட்சியில் இருக்கும் பொழுது ஈழதமிழர்களை பற்றி நினைக்கவில்லை இன்று மட்டும் எங்கே வந்தது திடீர் பாசம் மக்களை ஏமாற்றவா நான் தமிழனுக்காக போராடுகின்றேன் என்று.கருணாநிதி அவர்களே தமிழை வைத்து இனி மக்களை ஏமாற்ற முடியாது.


ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்துக் கொண்டு இருக்கும் பொழுது எங்கே போனீர்கள்.அன்று சொல்ல வேண்டியது தானே போரை நிறுத்தி அமைதி ஏற்பட இந்தியா வழி ஏற்படுத்த வேண்டும் என்று அவ்வாறு இந்தியா அரசாங்கம் செயல்படவில்லை எனில் மத்திய அரசாங்கத்துக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கூறியிருக்காலமே செய்தீர்களா இல்லை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து இருக்காலமே எதுவும் செய்யாமல் இன்று மட்டும் ஏன் தமிழர்கள் மேல் தனி பாசம் காட்டுகிறீர்கள்.தமிழன் பெயரை சொல்லி கேவலமான அரசியல் செய்கீறீர்களா?


உங்களால் ஈழம் என்ற வார்த்தையை கூட உபயோகப்படுத்த முடியவில்லை இன்னும் எதற்கு மத்திய அரசில் கூட்டணி குடும்ப உறுப்பினர்களை காப்பாத்தவா.தமிழ் மக்களுக்கு கனிமொழியும் ,தயாநிதிமாறனும் என்ன செய்துவிட்டார்கள் அவர்களுக்கு எதுக்கு டெசோ மேடையில் இடம்.தமிழன் விடுதலைக்கு போராடிய எத்தனை பேரை உங்களால் விழாவுக்கு அழைக்க முடிந்தது.உண்மையாக தமிழ்மக்கள் நலனுக்காக போராடிய ஒருவர் கூட இம் மாநாட்டிற்கு வரவில்லை.வந்த அனைவரும் உங்களால் பலன் அடைந்தவர்களும் கட்சி தொண்டர்கள் தான்.

நீதிமன்றம் தலையிட்டதால் பொதுமக்கள் எவ்வித இடையிறு இல்லாமல் தப்பித்தோம்.நிறைய கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்த படியால் உங்களாலும் கட்சி தொண்டர்களை கூட்டி மாநாட்டிற்கு கடலளவு கூட்டம் வந்தது என்ற தோற்றத்தை உருவாக்க முடியவில்லை.இம் மாநாட்டால் தாங்கள் என்ன சாதித்து விட்டிர்கள்.3 நாட்கள் தொலைக்காட்சிகளுக்கும் ,நாளிதழ்களுக்கும் செய்தி அளித்துள்ளீர்கள்.தமிழனுக்கு இதனால் என்ன லாபம்.



எல்லாம் முடிந்த பிறகு வடிவேலு பாணியில் மாநாடு வெற்றி வெற்றி என்று நீங்கள் கூறிக் கொள்கிறீர்கள்.ஒருவரும் உங்களை நம்ப தயாராக இல்லை.இன்று நீங்கள் பதவிக்காகவும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை வழக்கில் இருந்து காக்க தான் போரடி கொண்டுள்ளீர்களே தவிர்த்து தமிழ் மக்களுக்காக இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக