வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

விஜயகாந்த் இது நியாமா?


விஜயகாந்த் இது நியாமா?


ரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வந்தாலே போதும் முக்கியமான தெருமுனைகள், பஸ்நிலையங்கள், கோவில்கள் முன்னால் அனைத்தும் பிளக்ஸ் பேனர்கள் தான்.ஒவ்வொருவருக்கும் போடடி யார் அதிகஅளவில் பேனர் வைப்பது என்று பாவம் மக்களும் வியாபரிகள் தான் நடக்க இடம் இல்லாமல் சிரமப்படுகிறோம்.


கேப்டன் விஜயகாந்துக்கு ஆகஸ்ட் 25 பிறந்த நாளாம்.அதற்காக நலதிட்ட உதவிகள் வழங்குவதற்காக நேற்று தேனி வந்தார்.தமிழகத்தின்  பெரிய 2 வது சந்தை கூடும் இடத்திலும் தேனி மாவட்டத்தின் முக்கிய கடைகள் வங்கிகள் உள்ள பெரியகுளம் ரோடு முழுவதும் அடைக்கப்பட்டு மேடை அமைத்து உள்ளனர்.மேடை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்த பொழுது போரடி மேடை அமைத்துள்ளனர்.காலை முதல் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.


ஆடி 18 ஆன நேற்று கோவில் செல்லும் மக்கள் அனைவரும் மிக சிரமத்துக்குள்ளாகி திருப்பி வேறு பாதையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.அனைத்து கடைகளும் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டன.நான் கூட 5 நிமிட வேலைக்காக தேனி சென்றவன் இவர்களின் தொல்லையால் 3 மணிநேரம் செலவழிக்க வேண்டியதாயிற்று.


மிக முக்கியமான மருத்துவமனைகள் இச்சாலையில் தான் உள்ளன.ஏதாவது விபத்து அல்லது அசாம்பாவிதம் ஏற்பட்டு மருத்துவமனை செல்ல வேண்டிய சூலல் ஏற்பட்டால் 3 கிமி சுற்றி தான் செல்ல வேண்டும்.அதுவரை உயிர் தாங்குமா?.எனக்கு தெரிந்தவரை கேட்டவரை ஒருவர் கூட விஜயகாந்தை பாரட்டவில்லை மாறாக அனைவரும் திட்ட தான் செய்தனர்.


அரசியல் தலைவர்கள் கூட்டம் போடுங்கள் இல்லை என்ன வேனும் என்றாலும் பண்ணுங்க ஊருக்கு வெளியே மக்களுக்கு தொந்தரவு தராத இடங்களுக்கு போய் இரவும் பகலும் பேசுங்க.உங்க பேச்ச கேட்க நினைக்றவங்க எங்க இருந்தாலும் வருவாங்க.நலத்திட்ட உதவி செய்றோம்னு வந்துட்டு மக்களுக்கு இருக்ற நிம்மதிய ஏன் கெடுக்றீங்க.எங்களுக்கு நீங்க எப்பயும் உதவி செய்ய போறது இல்ல தயவுசெய்து உபத்ரம் பண்ணாதீங்க.

நேற்று அதிகபட்சம் 10 லட்சம் ருபாய்க்கு நல உதவி பண்ணுனாதா சொல்றாங்க ஆனால் தேனி மாவட்டம் முழுவதும் தேமுதிக கட்சிகாரங்க பேனர் வைச்சது மட்டும் 10 லட்சத்தை தாண்டிறும்.வந்த கூட்டத்துல முக்கால் வாசி பேரு அவங்க தலைவர் போல நல்ல போதையில தான் இருந்தாங்க.சினிமா படத்துல பக்கம் பக்கமா மக்கள பத்தி பேசுற விஜயகாந்த் 2 நிமிசம் யோசிச்சா அப்பாவி மக்களை தொந்தரவு பண்ண மாட்டாரு.


இது இவங்க கட்சி வெப்சைட் முதல் பக்கத்துல இருக்ற போட்டா




இப்படியே போனால் 2016 ல இல்ல எப்பயும் விஜயகாந்தால் முதல்வர் ஆக முடியாது.விஜயகாந்துனு இல்ல எல்லா கட்சிகாரனும் இப்படி தான் கூட்டம் போடுறம்னு சொல்லி ரோடு எல்லாத்தையும் மறைச்சிறாங்க.


ஆயிரம் பிரச்சனைகளோட போராடுற மக்களாகிய எங்களை கொஞ்சம் நிம்மதியா வாழவிடுங்க.

1 கருத்து:

  1. இதுவே பெரும்பாலன தேனிவாசிகளின் கருத்து..., என் கருத்தும் -- ஆதி

    பதிலளிநீக்கு