திங்கள், 30 ஜூலை, 2012

மோட்டல் என்ன கொடுமை சார் இது


மோட்டல் என்ன கொடுமை சார் இது


மோட்டல் இது டிரைவர்களுக்கு சொர்க்கம் பயணிகளுக்கு மாபெரும் நரகம்.


டிரைவர்களுக்கு எல்லாமே ஒசியா கிடைக்குதுனு பயணிகள பத்தி கவலைப்படாமா எவ்வளவு மோசாமான ஓட்டல்கள நிப்பட்டி எல்லாத்தையும் சிரமத்துக்குள்ளாக்குறாங்க.தனியார்,அரசு பேருந்து டிரைவர்களுக்கு நல்ல சம்பளம் தராங்க அப்புறம் எதுக்கு ஒசி சாப்பாட்டுக்கு அலையுறாங்களோ.


இந்த ஒட்டல விக்குற விலை எல்லாமே ஸ்டார் ஒட்டலா காட்டிலும் ரெம்ப அதிகம் தரம் சுவை னு பாத்திங்கனா கையேந்திபவன தரத்துல பத்துல ஒரு பங்கு கூட இருக்காது.ஒரு தடைவ இவங்க ஒட்டல சாப்பட்டவங்க அடுத்து கொலைபசினாலும் சாப்டமாட்டாங்க.ஒட்டுனர்கள் நடத்துனர்கள் மட்டும் எப்படி தினமும் சாப்டறாங்களோ.


சரி அவங்க தயாரிக்றது தான் வேணாம் வேற பிஸ்கட் இல்ல கூல்டிரிங்ஸ் சாப்டலாம்னு போனா விலையை பாத்திங்கனா MRP விலையை காடடிலும் குறைந்தபட்சம் 30 சதவிதம் அதிகமா விக்றாங்க.சரி அதுவும் வேணாம் தண்ணிபாட்டில் வாங்கலாம்னு பாத்த கம்பெனி தயாரிப்பு எதுவும் இருக்காது அவங்க சொந்த தயாரிப்பு தான் அது விலையை கெட்டாலும் நமக்கு தலைசுத்தும்.காபி சாப்டலாம்னு மட்டும் போயிராதிங்க சென்னை சரவணபவன காட்டிலும் விலை அதிகம் உறுதியா பாதிகூட சாப்டமாட்டிங்க.


நான் நேத்து சேலத்துல இருந்து பெங்களுர் போனபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது.இந்த மாதிரி ஒட்டல பத்தி நல்ல தெரிஞ்சது நாளா நான் எப்பயும் ஒன்னும் சாப்டறாது இல்ல.நேத்து சேலத்துல மதியம் சாப்பாட்ட சுவை அதிகமா இருக்குனு ஒரு கட்டு கட்டிட்டேன்.வயிறு தொந்தரவு கொடுக்க அரம்பிச்சுருச்சு சரி ஒரு ஸ்பிரைட் வாங்கலாம்னு வாங்கிட்டேன் அதொடா விலை 26 தான் ஆனா அங்க வித்தது 38.ஏற்கனவே வயிறு எறிஞ்சது அவங்க அடிச்ச கொல்லையில இன்னும் அதிகமா எறிய ஆரம்பிச்சுருச்சு.எலலா பஸ்களும் இந்த சூரியா ஒட்டல தான் நிப்பாட்றாங்க.கிரிஷ்ணகிரி தாண்டுனதும் இருக்கு.


சேலம் பெங்களுர் நெடுஞ்சாலையில நிறைய நல்ல ஒட்டல்கள் இருக்கு.ஏன் அடையார் ஆனந்தபவன் கூட 4-5 இருக்கும் உண்மையிலேயே அங்கே சுவை நல்லாஇருக்கும்.விலையும் அவங்கள காட்டிலும் ரொம்ப குறைவு தான் ஆனா டிரைவர்களுக்கு ஒசி  இல்லை அதனால ஒரு சில பேருந்து தான் நிப்பாட்றாங்க.இங்கே காபி ரொம்ப நல்லா இருக்கும்.


ரயிலுல உண்மையிலயே பராவயில்ல இந்தியா முழுவதும் ஒரே விலை.இந்த மாதிரி ஒட்டல கிடைக்குற காபிய காட்டிலும் சுவையும் நல்லா இருக்கும்  விலை இன்னும் 6 ரு தான்.அனைத்து விலையும் பாக்கெட்டில் உள்ள விலை தான்.தண்ணிபாட்டில் விலை வெளியில கிடைக்குறதா காட்டிலும் கம்மி தான்.


அரசாங்கமும் இதை பத்தி எப்பயும் கண்டுக்றது இல்ல.என்னைக்கு இவங்க திருந்த போறாங்களோ.பொதுமக்கள் என்னைக்கும் பாவம்  தான்.

வெள்ளி, 27 ஜூலை, 2012

சென்னை பள்ளி பேருந்தில் மட்டும் தான் ஒட்டையா..அரசுப்பேருந்தில் இல்லையா?


சென்னை பள்ளி பேருந்தில் மட்டும் தான் ஒட்டையா..அரசுப்பேருந்தில் இல்லையா?


சென்னையில் புதன் அன்று பள்ளி பேருந்தில் இருந்த ஒட்டை வளியாக விழுந்து பள்ளி மாணவி ஸ்ருதி பலியான விதம் மிகவும் கண்டணத்துக்குள்ளாகி பலவிதமாக விமர்ச்சனங்கள் வந்தன.பள்ளி நிர்வாகிகள் மற்றும் வாகனஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஒவ்வொரு விபத்தின் பொழுதும் மக்கள் அச்சமயம் அதைப்பற்றி பேசுவதும் கொந்தளிப்பதும் அரகாங்கம் வேகமாக நடவடிக்கை எடுப்பதும் அதன் பிறகு அதை மறந்து விடுவதும் நடந்து கொண்டு தான் வருகிறது.


பள்ளபேருந்தில் ஒட்டை இருந்தது இவ்விபத்து நடக்க போய் வெளியே தெரிந்தது.ஆனால் தமிழ்நாட்டில் இயங்கும் குறைந்த பட்சம் 20 சதவிதம் அரசாங்க பேருந்துகளில் இதை காட்டிலும் பெரிய  ஒட்டைகள் ஜன்னல்களுக்கு கண்ணாடி இல்லாமல் உள்ளது.விபத்தும் நடந்து கொண்டு தான் உள்ளது இதுக்கு யார் மேல நடவடிக்கை எடுக்றாங்க.போன மாசம் அண்ணா சாலையில அரசாங்க பேருந்து கவிழ்ந்ததுக்கு இது வரைக்கும் யார் மேல நடவடிக்கை எடுத்து இருக்காங்க. நீண்ட துரம் விரைவுப்பேருந்துல போகும் பொழுது ஜன்னல் முடமுடியாம அந்த குளிர்காத்துல போகும் பொழுது நாம படுற வேதனையை நடத்துனரிடம் சொன்ன அரசாங்கம் இருக்குறத வைச்சு ஒட்டுங்க செலவழிக்க பணம் இல்லைனு சொல்றாங்க.இதுக்கு அரசாங்கம் இது வரை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கு.


உயிர் விலை மதிப்பற்றது விபத்து நடந்த பிறகு அரசாங்கம் பணஉதவி பண்றதுக்கு விபத்து நடக்காம இருக்குறதுக்கு  நடவடிக்கை எடுக்கலாம்..பல அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிட்டு எல்லாத்துக்கும் அனுமதி கொடுத்துறாங்க ஆனால் பழி ஆகிறது பாவப்பட்ட பொதுமக்கள் தானே.என்னைக்கு எல்லாரும் உணருவாங்க.

வியாழன், 26 ஜூலை, 2012

பாஸ்போர்ட் -புதிய முறை-அருமை


பாஸ்போர்ட் -புதிய முறை-அருமை 

புது பாஸ்போர்ட் இல்ல பாஸ்போர்ட்ட புதுப்பிக்கனும் அப்படினால இதுக்கு முன்னுக்க வரைக்கும் குறைஞ்சது ஒரு நாள் முழுவதும் ஆகும்.அது இல்லாம நம்ம நேரங்காலத்த பொருத்து அதுக்கு பிறகு அலையவேண்டிய சூல்நிலை இருந்தது.அது இல்லாம புகைப்படம் கோணலா இருக்குனு சொல்லி அலைகழிப்பாங்க பாஸ்போர்ட் ஆபிஸ் முன்னுக்க இருக்குறவங்க தான் பார்ம் புல் பண்ணனும் நாம பண்ணின 1000 குறை சொல்லி திரும்ப அவங்ககிட்ட தான் அனுப்புவாங்க.அதுலயும் நாம ஆன்லைன்ல விண்ணப்பம் போட்டு தேதி வாங்கி போனம்னா நாம கொடுத்த விவரங்கள் கொஞ்சம் தப்பா இருந்தாலும் இன்னொரு நாள் போய் அலையனும்.இதுல புரோக்கர்கள் தொல்லை வேற இருக்கு. 

 ஆனால் இப்ப அப்படி எல்லாம் இல்லாம ரொம்ப எளிதாகவும் அதிகபட்சம் 2 மணிநேரத்துக்குள்ள நாம பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிச்சரலாம்.நாம சரியான டாக்குமென்ட்ஸ் மட்டும் கொண்டு போன போதும்.விண்ணப்பிக்கும் பொழுது நம்மை அரியாம தப்பு பண்ணி இருந்தாலும் அவங்களே அதை சரிபண்ணிகிறாங்க.முற்றிலும் குளிர்சாதன அறையில நல்ல மரியாதையோட நீங்க விண்ணப்பிச்சிட்டு வெளிய வரலாம்,
 இது பாஸ்போர்ட் சேவா கேந்ரா-(PASSPORT SEVA KENDRA) 
TCS நிறுவனம் இதை பாஸ்போர்ட் அலுவலகத்துடன் சேர்ந்து நடத்துகிறது.உண்மையிலேயே அருமையான கனிவான புன்னகை முகத்துடன் சேவை. 

https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink

இவ் இணையதளத்துக்கு சென்று வலது பக்கம் ONLINE APPLICATION FILLING இருக்கும் அங்கே சென்று NEW USER அ பாதிஞ்சிகாங்க.அது பதிஞ்ச பிறகு உங்க முதல் பக்கம் திறக்கும்.அதுல போய் நீங்க புது பாஸ்போர்ட் விண்ணப்பிக்றங்களா இல்ல ரெனிவலானு தேவையானதை செலக்ட் பண்ணிக்காங்க.அதுக்குப்பிறகு அவங்க உங்களை பத்தி கேட்டு இருக்குற விவரங்களை டாக்குமெண்ட்ஸ்ள இருக்ற மாதிரி குடுங்க ஒவ்வொரு ஸ்டெப் முடியும் பொழுதும் மறக்காமா SAVE பண்ணிக்காங்க.எல்லா விவரமும் கொடுத்த பிறகு கடைசியா எப்ப நாம அலுவலகத்துக்கு போகனும்னு நினைக்கிறங்களோ அந்த தேதியையும் நேரத்தையும் தேர்வு பண்ணிக்காங்க.அவ்வளவு தான் முடிஞ்சசு.அப்படியே பிரிண்ட் எடுத்துகாங்க.இன்னைலயிருந்து 90 நாள்குள்ள ஒரு தேதிய நாம புக் பண்ணிக்றலாம். 

இது மதுரை அலுவலகம்





 சொன்ன தேதியில நீங்க தேர்ந்து எடுத்த நேரத்துக்கு 30 நிமிசம் முன்னாடி பாஸ்போர்ட் சேவா கேந்ரா அலுவலகத்துக்கு போயிறுங்க.போகும் பொழுது உங்ககிட்ட இருக்குற டாக்குமென்ட்ஸ் ஒரிஜினல் கொண்டு போங்க. புகைப்படம் தேவை இல்லை.அவங்களே புகைப்படம் எடுத்துகிறுவாங்க.அத்தோட எல்லா விரல்ரேகையும் பதிஞ்சுகிறாங்க. நார்மல் விண்ணப்பம்னா 1000 ருபாயும் தக்கல்னா 2500 ருபாயும் கொண்டு போங்க.அதிகபட்சம் 2 மணி நேரத்துல உங்க வேலையை முடிச்சிட்டு வந்துரலாம் குளு குளுனு.அலுவலகத்துல எல்லோரும் புன்னகையோட உபசரிக்றாங்க.

 தேவையான டாக்குமெனட்: 
1.VOTER ID
2.RATION CARD
3.DATE OF BIRTH CERTIFICATE(1989 க்கு பிறகு பிறந்தவங்களுக்கு) 
4.SSLC OR HSC MARK SHEET 
5.DEGREE CERTIFICATE
6.VOTER ID இல்லாதவங்க 
 GOVERMENT BANK PASSBOOK MINIMUN 1 YEAR TRANSACTION 
 GAS BILL BOOK 
 LAND/HOUSE ORIGINAL DOCUMENT 
 ADARSH CARD

செவ்வாய், 24 ஜூலை, 2012

இளையராஜா


இளையராஜா


இளையராஜாவை எனக்கு ரொம்ப புடிக்கும்.நான் சின்ன வயசுல அதிகமா என்னை அறியாமலே இசை பற்றி தெரியாத காலங்களில் டீ கடைகளில் அவரது பாடலை கேட்டு ரசித்து உள்ளேன்.அத்துடன் எனது பக்கத்து ஊர்காரர்னால அதிகமாக பிடிக்க ஆரம்பிச்சுருச்சு.


அவரை பற்றி பலர் சொல்றாங்க ரெம்ப தலைகணம் பிடிச்சவருனு திறமை இருக்குற இடத்துல தலைகணம் இருந்தா தப்பா.கோவில ஒரு லைட் வாங்கி கொடுத்துட்டு அந்த வெளிச்சம் மறைக்ற அளவு பெயர் போட்டுக்கிட்டு இருக்ற இந்த காலத்துல இளையராஜா நிறைய உதவிகளை விளம்பரம் இல்லாமல் செய்றாரு.


இன்னைக்கு பெத்தவங்களை முதியோர் இல்லத்துல விடுற இந்த காலத்தல அவரு அவங்க அம்மாவுக்கு சமாதி கட்டி அவருடைய நினைவு நாள்ல அன்னதானம் போட்டு அவங்க அம்மாவ சாமியா வணங்குறாரு.அதே போல அவரு மனைவி இறந்தப்பயும் அவங்க அம்மா சமாதி பக்கத்துலேயே சமாதி கட்டி இருக்காரு.


ஆனமிகத்துல ரொம்ப தீவிரமா இருக்குறது இல்லாம ஆன்மிக நெறிகளை கடைப்பிடிக்றாரு.ரஜினிக்கு ஒரு வகையில ஆன்மிக குருனு இளையராஜாவ சொல்லலாம்.ரஜினியே ஒரு பேட்டியில சொல்லி இருக்காறு.


யாரு நல்ல இசையை குடுத்தாலும் நான் ரசிச்சுகிட்டு தான் இருக்கேன் எல்லோர் இசையையும் கேக்குறேன் ஆனால் இளையராஜா இசைனா என்னையை என்ன என்னமோ செய்யுது.அதை விவரிக்க எனக்கு வார்த்தை இல்லை.ஒரு சில பாடல்களை கேட்டு அழுது இருக்கேன்.ஒரு சில பாடல்களை கேட்கும் பொழுது நாம காதலிக்கலேயே னு நினைச்சு இருக்கேன்.காலம் கடந்த பாடல்கள் எத்தனை ஆயிரம்


பள்ளி கல்லூரி காலங்களில் காதல்,.சோகம், அடிப் பாடல்கள் னு விதவிதமாக கேசட் பதிஞ்சு இருக்கேன்.நண்பர்களுக்குள்ள போட்டி வரும் யாரு கேசட்ல நல்ல பாடல்கள் இருக்குனு.ரெக்கார்டிங் சென்டர்னு அப்ப நிறைய இருக்கும். நான் பார்த்த வரை அப்ப இளையராஜா பாட்ட தான் நிறைய பேரு விரும்பி பதிச்சாங்க.


நிறைய இசைஅமைப்பாளர்கள் ,நிறைய படங்கள் வருது ஆனாலும் மனதை வருடுகிற பாடல்கள் னு பார்த்த குறைவு தான்.இளையராஜாவின் பாடல்கள் தான் இப்ப நிறைய பேரு அதிகாமா கேக்குறாங்க.எங்க தோட்டத்துல கரும்பு வெட்டுகிற கூலி ஆட்கள் மொபைல வேலை நேரம் முழுவது;ம் இளையராஜா பாட்ட தான் கேக்குறாங்க.கிழ் மட்டத்துல இருந்து மேல் மட்டம் வரைக்கும் எல்லார் வாழ்விலும் இளையராஜாவின் பாடல்கள் ஒர் பகுதியாக வந்து கொண்டு தான் உள்ளது. 

ஞாயிறு, 22 ஜூலை, 2012

இதுவும் கடந்து போகும்


இதுவும் கடந்து போகும்


இதுவும் கடந்து போகும் இவ்வார்த்தை பகவத்கீதையில் அர்ஜீனனுக்கு பகாவான் கண்ணன் சொன்னது.


எவ்வளவு அழகான உணர்வுபூர்வமான வார்த்தை.இதன் தத்துவத்தை புரிந்து கொண்டால் வாழ்க்கை தத்துவமே விளங்கி விடும்.இன்பம் துன்பம் அனைத்தும் சமமாக தெரியும்.


இன்று நாம் சந்தோசம் என்று நினைக்கும் ஒரு விசயம் வருத்தமான செய்தி வந்ததும் சந்தோசததை மறந்து கவலை பட ஆரம்பித்து விடுகிறோம்.அதே போல் வருத்தமான நேரத்தில் சந்தோச செய்தி வந்தவுடன் வருத்தத்தை மறந்து சந்தோச பட ஆரம்பித்து விடுகிறோம்.


மகிழ்ச்சியோ வருத்தமோ எதுவும் நிரந்தரம் இல்லை எல்லாம் கடந்து போகும்.அதனால் தான் இந்து சமுதாயத்தில் ஒருவர் இறந்து விட்டால் காரியம் முடிந்ததும் சம்பந்தி விருந்து வைத்து இறந்தவரின் குடும்பத்தை சந்தோசபாதைக்கு திசை திருப்புகின்றனர்.


இன்றைய இளைஞர்கள் இத்தத்துவத்தை மிக அழகாக புரிந்து உள்ளனர் அதனால் தான் ஓரு பெண் அவனது காதலை நிராகரித்தால் உடனே அடுத்த பெண்ணை தேடி  போகின்றனர் எவ்வித வருத்தமும் இல்லாமல்.


இன்று நாம் பெரிய பிரச்சினை என்று நினைக்கும் ஒரு விசயம் அதை காட்டிலும் பெரிய பிரச்சினை வந்ததும் பழையதை மறந்து புது பிரச்சினை பெரியது என்று  பழைய விசயங்களை மறந்து விடுகிறோம்.இது தான் வாழ்க்கை அனைத்தும் கடந்து போகும்


இறந்தவர்களுடன் சுடுகாட்டுக்கு செல்லும் பொழுது நாமும் ஒரு நாள் இங்கே வரவேண்டியவர்கள் தான் என நினைத்தாலே சண்டை சச்சரவு இல்லாமல் வாழலாம்.

இதுவும் கடந்து போகும்.



சனி, 21 ஜூலை, 2012

பெண்கள் ஏன் இப்படி?உங்களுக்கு தெரியுமா?


பெண்கள் ஏன் இப்படி?உங்களுக்கு தெரியுமா?


நன்றாக இருக்கும் சேலையையும் அல்லது வேற எந்த உடையையும் ஆண்களை பார்த்தவுடன் சரி செய்வது ஏன்.அதுவும் முக்கியபாக மாரப்பு சேலையை சரிசெய்வது ஏன்?


பேருந்தில் உட்கார இடம் இருந்தாலும் 60 வயது பாட்டி கூட ஆண்கள் அருகில் இடம் இருந்தும் நின்று கொண்டு வருவது ஏன்?
பெண்கள் அமரும் பகுதியில் ஆண்கள் அமர்ந்தால் அது எங்கள் இருக்கை என்று ஆண்களை எழுப்பி விடும் சென்னை மகளிர் ஏன் ஆண்கள் இருக்கையில் உட்காருகிறார்கள்?


ஆண்கள் தெரியாமல் இடித்தாலும் சண்டைக்காரனை போல் முறைப்பதும் அதே அவர்கள் இடித்தால் பதிலுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்பது இல்லையே ஏன்?


என்ன தான் அழகாக இருந்தாலும் அழகு கிரிம்கள் உபயோகித்து அழகை கெடுத்து கொள்வது ஏன்? சகிக்கவில்லை சிலரது மேக்கப்பை.


ஜாக்கெட்டில. ஜன்னல் வைப்பது இல்லை எனில பல கன்றாவி டிஸைன்களை உபயோகித்து உடம்பை அனைவருக்கும் காண்பிப்பது ஏன்?கிராமங்களில் ஜாக்கெட் இல்லாமல் இருக்கும் பெண்களிடம் கூட கவர்ச்சி தெரியவில்லை இந்த கன்றாவி டிஸைன்களை பாhத்தால் அருவருப்பாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது.





நாளிதள்கள் தொலைகாட்சிகள் வரும் பெரும்பான்மையான விளம்பரங்கள் பெண்களின் அழகுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தான் வருகின்றன்.ஆனால் இப்பொழுது உள்ள இளையதலைமுறை மஞ்சளை மட்டும் உபயோகப்படுத்துவது இல்லையே ஏன்?


அழகு நிலையங்கள் பலசரக்கு கடைகளை காட்டிலும் அதிகளவு உள்ளன.
அழுகுநிலையங்களுக்கு சென்று ஒவ்வாமை என்று தோல் மருத்துவரை தேடி அழைகிறோம்.இயற்கையாவே பெண்கள் மிகவும் அழகானவர்கள் தானே ஏன் செயற்கையை தேடி அழைகின்றனர்.


நாகரிக உலகம் பல கேள்விகளுக்கு பதில் இல்லை.முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற நல்ல விசயங்கள் அனைத்தையும் விட்டு விட்டோம்.எங்கே செல்கிறோம் எதுவும் புரியவில்லை.உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா?

வியாழன், 19 ஜூலை, 2012

டாஸ்மார்க்+ மக்கள் +எமன் =வருமானம் 18081 கோடி


டாஸ்மார்க்+ மக்கள் +எமன் =வருமானம் 18081 கோடி


1983-84 ல் ஆரம்பிக்கப்பட்ட டாஸ்மார்க்  நிறுவனம்.அந்த வருட வருமானம் 139.41 கோடி ஆகும்.2011-2012 ல் ஆண்டு வருமானம் அதிர்ச்சி அடையாமல் படியுங்கள் 18081.16 கோடி.ஏறக்குறைய 130 மடங்கு வளர்ச்சி.


YEAR
EXCISE REVENUE IN CRORE
SALES TAX IN CRORE
TOTAL IN CRORE
1983


139.41
2003-04
1657.10
1982.83
3639.93
2004-05
2549.00
2323.03
4872.03
2005-06
3176.65
2854.12
6030.77
2006-07
3986.41
3487.20
7473.61
2007-08
4764.05
4057.11
8821.16
2008-09
5755.42
4846.08
10601.50
2009-10
6740.59
5757.63
12498.22
2010-11
8115.90
6848.52
14965.42
2011-12
9956.06
8125.10
18081.16




இவை மட்டும் இன்றி பார் முலமாக வரும் வருமானம் தனி.அரசாங்கத்தால் முழுவதும் நடத்தப்படும் இந்நிறுவனத்தால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் சில


மதுரை நகரில் இருக்கும் மருத்துவ மனைகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 பேர் மரணம் அடைகின்றனர் கல்லீரல் பாதிப்பால்,அனைவரும் டாஸ்மார்க்கின் வாடிக்கையாளர்களே.இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு சரியான லாபம்.அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சோத்த பிறகே மரணம் அடைகின்றனர்.சிகிச்சைக்கு குறைந்த பட்ச செலவு 1 இலட்சம் ஆகிறது.இதற்கு போடப்படும் வரியும்  அரசாங்கத்துக்கு தனி வருமானம்.


மக்கள் வெகு தொலைவு அலைய வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தால் 2 தெருவுக்கு ஒரு கடை அரசாங்கத்தால் திறக்கப்பட்டு உள்ளது.
அரசாங்கமே குடிக்க கடையை திறந்து விட்டு குடித்து விட்டு வண்டி ஒட்டுகிறீர்கள் என்று காவல்துறை அதிகாரிகளால் குறைந்தபட்சம் 2000 ருபாய் அபாரதம வசூலிக்கின்றனர்.அந்த வருமானமும. ஆரசாங்கத்துக்கே.
இதில் காவல் துறை அதிகாரிகளின் அன்பளிப்பு தனி.


டாஸ்மார்க் கடைகளில் வாங்கும சரக்குகளுக்கு விற்பனை அதிகாரிக்கு 5 ரு அதிகம் கொடுத்தால் தான் சரக்கு கிடைக்கும்.அதனால் ஒரு நாளில. குறைந்த படசம் விற்பனை செய்பவருக்கு ரு 1000 கிடைக்கிறது.


இன்னும் எத்தனையோ வருமானம் குடிப்பதால் அரசாங்கத்துக்கு செல்கிறது.இதை வைத்து அவர்கள் எத்தனை இலவசங்கள் வேனும் என்றாலும் தரளாம்.ஆனால் அவற்றை முழுவதும் அனுபவிக்க குடிப்பவர்களால் தான் முடியாது.


வாழ்க அரசாங்கம்,பாவம் மக்கள்.
என்று தனியும் குடிப்பவர்கள் மோகம்.

கால்பந்து மரணங்கள்


கால்பந்து மரணங்கள்


ஜீலை 10 ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளுர் கால்பந்து ஆட்டத்தொடரில் ஆட்டத்தின் பொழுதே மகேஷ்தபா என்னும் வீரர் மைதானதிதலேயே இறந்தார்.அச்சமயம் மைதானத்தில் எவ்வித முதலுதவி உபகரணங்கள் இல்லாதது தான் பெரிய கொடுமை.


இதுவரை கடந்த 120 ஆண்டுகளில் 93 கால்பந்து வீரர்கள் மைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் மரணம் அடைந்து உள்ளனர்.


இதுவரை இந்தியாவில் மைதானத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள்


1998 ஆம் ஆண்டு தாகாவில் நடைபெற்ற கிரிக்கெட ஆட்டத்தில் தலையில் காயம்பட்டு ராமன்லம்பா மரணம் அடைந்தார்


2004 ஆம் ஆண்டு பெங்களுருவில் நடைபெற்ற் பெடரேசன் கோப்பபை கால்பந்து இறுதி ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ஜீனியர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்


2011 ஆம் ஆண்டு பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் கோல்கீப்பர் அருண்குமார் மைதானத்திலேயே மரணம் அடைந்தார்


2012 ஆம் ஆண்டு மாhச் மாதம் பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் வெங்கடேஸ் மரணம் அடைந்தார்


2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் கொல்காத்தாவில் நடைபெற்ற போட்டியில்  மகேஷ்தபா மைதானத்திலேயே மரணம் அடைந்தார்.


இனிமேல் வேண்டாமே களச்சாவு




புதன், 18 ஜூலை, 2012

விமான டிக்கெட் குறைவான விலையில் புக் செய்ய


விமான டிக்கெட் குறைவான விலையில் புக் செய்ய


விமான டிக்கெட் ஆன்லைனில் புக் செய்வது என்பது மிகவும் எளிதானது.அத்துடன் புரோக்கரிடம் சென்று புக் செய்வதை காடடிலும் பணமும் மிகவும் குறைவாக இருக்கும்.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.பல பேர் இதை பயன்படுத்தி இருக்கலாம்.எனக்கு தெரிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன்.


விமானநேரம்,விமானநிறுவனம் மற்றும் கட்டணம் பற்றி தேட சில தளங்கள் கிழே தந்து உள்ளேன். அங்கே சென்று நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை கொடுத்து தேடுங்கள்.அனைத்து தளங்களிலும் தேடுங்கள்.ஒரு சில தளங்கள் நிறைய சலுகைகள் தரும் ஆகையால் பொறுமையாக தேடுங்கள்.நீங்கள் இத் தேடலில் முடிவு எடுத்து விட்டாலும் நீங்கள் தேர்வு செய்த விமானநிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று அங்கும் பயண கட்டணத்தை பார்த்து விட்டு எத்தளத்தில் கட்டணம் குறைவாக உள்ளது என்பதை பார்த்து புக் செய்யவும்.


டிக்கெட் புக்செய்யும் பொழுது அத் தளத்தில் கேட்கப்பட்டு இருக்கும் தகவல்களை பொறுமையாகவும் ஒன்றுக்கு இரண்டு தடவை சரிபார்த்து தகவல்களை கொடுங்கள் அவசரம் வேண்டாம்.தற்சமயம் அனைத்து விமானநிறுவனங்களும் நெட்பேங்கிங் முறையை ஏற்றுக்கொள்கிறார்கள்.


தேடலுக்கான சில தளங்கள்




நான் அதிகம் பயன்படுத்தும் தளம்.விமான கட்டணம் மற்ற தளங்களை காட்டிலும் குறைவாக இருக்கும்.அத்துடன் இவர்களின் வாடிக்கையாளர் சேவை மிக சிறப்பாக உள்ளது. அவர்களை தொடர்பு கொள்வதும் மிக எளிதாக உள்ளது.

இது ஒரு தேடல் தளம் மட்டுமே.அனைத்து தளங்களிலும் தேடி குறைவான கட்டணம் உள்ள தளத்தை நமக்கு தருகிறது


இத்துடன் விமான நிறுவனங்களின் இணையதளங்களிலும் ஆன்லைன் புக்கிங் வசதி உள்ளது.அதிலும் தேடிப்பாருங்கள்.

இந்தியாவிற்குள் நீங்கள் பயணம் மேற்கொண்டால் பயணத்தின் பொழுது அரசாங்கத்தால் அனுபதிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்று பயணத்தின் பொழுது கொண்டு செல்லுங்கள்.புக் செய்யும் பொழுது தேவை இல்லை.

வெளிநாட்டிற்கு செல்வதாக இருந்தால் புக் செய்யும் பொழுது கண்டிப்பாக பாஸ்போர்ட்டில் உள்ளது படி தகவல்களை அளியுங்கள்.பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.





செவ்வாய், 17 ஜூலை, 2012

ஓரே நிமிடத்தில் இரயிலில் இடம் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி:


ஓரே நிமிடத்தில் இரயிலில் இடம் உள்ளதா என்பதை பார்ப்பது எப்படி:


இரயிலில் பயணம் செய்வது என்பதே ஒரு தனி சுகம் தான்.அதுவும் வயதானவர்கள் சர்க்கரை நோயளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் .அத்துடன் பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் பொழுது பணமும் மிச்சம் சுகமும் அதிகம்


 தற்சமயம் இரயிலில் இடம் உள்ளதா என்பதை பார்ப்பதற்கு நிறைய இணையதளங்கள் உள்ளன.ஆனால் நாம் இடம் உள்ளதா என்பதை அறிய அதிகம் நேரம் ஆகின்றது.ஆனால் நான் குறிப்பிடும் 2 தளங்களும் நாம் மிக வேகமாக இருக்கை நிலவரங்களை அறிவதுடன் பயணகட்டணத்தையும் சேர்த்து அளிக்கின்றது.
   


அத்துடன் நாம் செல்லும் ரயிலின் மேப்பையும் நிற்கும் ஊர்களையும் நிற்கும் நேரஅளவையும் சிறப்பாக அளித்து உள்ளனர்.அத்துடன் இரயில் தற்சமயம் எங்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதை மிக தெளிவாக அளித்துள்ளனர்.இன்னும் நிறைய வசதியுடன் உள்ளது முயற்சித்து பாருங்கள் உண்மையை உணர்வீர்கள்.


http://indiarailinfo.com


http://erail.in

பங்கு சந்தை


பங்கு சந்தை


நேற்றைய சந்தைய கடைசி நேரத்தில் கீழ்நோக்கி பயணித்தது.இன்றைய ஆசிய சந்தைகள் அனைத்தும் பாசிட்டிவ் மோடில் பயனிக்கின்றன.இந்த வருடம் பருவமழை எதிர்பார்த்த அளவை காட்டிலும் மிக குறைவாக இருக்கும் என்ற செய்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்று ஆக்சிஸ் பேங்க் காலண்டு முடிவு வர உள்ளது.சந்தை இன்று மேல்நோக்கி செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது.


Buy Short Term
Bharati Airtel::Buy Current Level SL:305,Target:328
Reason to Buy:BULLISH BREAKOUT WITH HIGH VOLUME


Intraday :

NSE SCRIP CODE


BHARTIARTL
DHFL
GLOBUSSPR
LUPIN
DRREDDY
PREV
CLOSE

319.55 171.95 113.85 571.15 1675.35
BUY
ABOVE

324.00 172.27 115.56 576.00 1681.0
STOP
LOSS

319.52 169.00 112.89 570.02 1670.77
TGT
ONE

328.35 175.47 118.21 581.72 1690.42
TGT
TWO

332.90 178.80 120.94 587.77 1700.71
TGT
THREE

337.47 182.16 123.70 593.84 1711.03
TGT
FOUR

342.08 185.55 126.50 599.95 1721.39


திங்கள், 16 ஜூலை, 2012

பங்கு வணிகம்


பங்கு வணிகம்

இன்று ஆசிய மார்க்கெட் அனைத்தும் பெரிய மாற்றம் இல்லாமலும் negative டைரக்ஸன் ல் உள்ளது.

நமது மார்க்கெட் நியுட்ரலாக ஒப்பன் ஆக வாய்ப்பு உள்ளது.இன்று சந்தை பெரிய மாற்றம் இல்லாமல் வெள்ளிக்கிழமை நடந்தது போல் நடக்க் வாய்ப்பு அதிகம்.

BUY:(Intraday)
Divislab-SL below 1030
Tatamotors-SL below 233
Cairn-SL below 312


SELL(Intraday)
Rel capital:SL362
Bhartiairtel:SL 309

Thiratti.com Tamil Blog Aggregator

சனி, 14 ஜூலை, 2012

அம்மா பற்றி கண்ணதாசன், வைரமுத்து ஆடியோ


அம்மா பற்றி கண்ணதாசன் வைரமுத்து ஆடியோ


அம்மாவின் புகழை சொல்ல தமிழில் வார்த்தை இல்லை.தான் கஷ்டப்படாலும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கனும்னு வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளுக்காக வாழும் அம்மாவை வாழ்நாள் முழுவதும் நாம் வணங்குவோம்.


நாம் எத்தனை சாதித்தாலும் தாயை மதிக்கவில்லை எனில் அதைபோல் பாவம் எதுவும் இல்லை.


அம்மா பற்றி கவிஞர் கண்ணதாசனின் அருமையான கவித்துவமான வார்ததைகள் ஆடியோவாக



அம்மாவின் அருமைபற்றி கள்ளிக்காட்டு நாயகன் வைரமுத்துவின் அருமையான பேச்சு ஆடியோவாக

புதன், 11 ஜூலை, 2012

மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்


மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்


மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் என்னை ரொம்பவே பாதித்த மாற்றிய ஒரு புத்தகம் .கொஞ்சம் மனசு பாதிச்சாலும் நான் முதலில் படிப்பதோ  கேட்பதோ மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் தான். 


சுவாமி சுகபோதானந்தா அவர்களால் ஆனந்த விகடனில் தொடராக வந்து மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்.வாழ்க்கை தத்துவங்களை மிகவும் எளிய முறையாகவும் அவற்றை  எடுத்துகாட்டுடன் மிக அருமையாக விளக்கி உள்ளார்




தாழ்வு மனப்பான்மை மன குழப்பம் அதிகம் உள்ளவர்கள்;;; இப்புத்தகத்தையோ இல்லை ஆடியோவோ கேட்டார்கள் எனில்  அவர்கள் தெளிவு அடைவது உறுதி.அனைத்து மத தத்துவங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் உதாரணாமாக தந்து உள்ளது மிகவும் சிறப்பு.எவ்விடத்திலும் அறிவுறை இல்லை உதாரணங்கள் மட்டும் தெளிவாக தந்து நம்மை தெளிவாக்கி உள்ளார் மிக அருமையான புத்தகம்
.
இப்புத்தகத்தை விகடன் நிறுவனத்தாரே ஆடியோவாகவும் வெளியிட்டு உள்ளனர்.நிழல்கள் ரவி அதற்கு குரல்வளம் அளித்துள்ளார்.மிகவும் அருமையாக ஏற்ற இறக்கங்களுடன் அருமையாக பேசியுள்ளார் ஓரு முறை கேட்டு பாருங்கள் உண்மையை உணரலாம்.


இப்புத்தம் எனக்கு மாபெரும் புத்துணர்வு அளித்துள்ளது அனுபவித்து பாருங்கள் புரியும்


டவுன்லோட் லிங்


ஆடியோ லிங்க்
மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் 


புக்லிங்க்:
மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்




செவ்வாய், 10 ஜூலை, 2012

தேடல்


,d;W midj;J JiwapYk; mghu tsh;r;rp.nghJthf midtUk; nghUshju hPjpahfTk; jd;dpiwT ngw;Ws;Nshk;.MdhYk; kdjpy; midtUf;Fk; xU Fiw. mjw;F fhuzk; vd;d?

vdf;F vd; tho;f;if gw;wp xh; khngWk; Njly;?

ehd; vjw;fhf gpwe;Njd;.vd; flik vd;d ehd; ,t; cyif tpl;L nry;Yk; nghOJ nfhz;L nry;tJ vd;d? vd; Njly; vd;d vJTk; vdf;F Ghpatpy;iy.Mifahy; vd; kdjpy; Njhd;Wk; vz;zq;fisAk;.ehd; urpj;j tpraq;fs; midj;ijAk; tiyg;gjptpy; vOjyhNk vd;W Nahrpj;jjpd; tpisNt ,e;j tiyg;gjpT.

,it vdJ igj;jpaf;fhuj;jdkhd fpWf;fy;s; kl;LNk.