திங்கள், 30 ஜூலை, 2012

மோட்டல் என்ன கொடுமை சார் இது


மோட்டல் என்ன கொடுமை சார் இது


மோட்டல் இது டிரைவர்களுக்கு சொர்க்கம் பயணிகளுக்கு மாபெரும் நரகம்.


டிரைவர்களுக்கு எல்லாமே ஒசியா கிடைக்குதுனு பயணிகள பத்தி கவலைப்படாமா எவ்வளவு மோசாமான ஓட்டல்கள நிப்பட்டி எல்லாத்தையும் சிரமத்துக்குள்ளாக்குறாங்க.தனியார்,அரசு பேருந்து டிரைவர்களுக்கு நல்ல சம்பளம் தராங்க அப்புறம் எதுக்கு ஒசி சாப்பாட்டுக்கு அலையுறாங்களோ.


இந்த ஒட்டல விக்குற விலை எல்லாமே ஸ்டார் ஒட்டலா காட்டிலும் ரெம்ப அதிகம் தரம் சுவை னு பாத்திங்கனா கையேந்திபவன தரத்துல பத்துல ஒரு பங்கு கூட இருக்காது.ஒரு தடைவ இவங்க ஒட்டல சாப்பட்டவங்க அடுத்து கொலைபசினாலும் சாப்டமாட்டாங்க.ஒட்டுனர்கள் நடத்துனர்கள் மட்டும் எப்படி தினமும் சாப்டறாங்களோ.


சரி அவங்க தயாரிக்றது தான் வேணாம் வேற பிஸ்கட் இல்ல கூல்டிரிங்ஸ் சாப்டலாம்னு போனா விலையை பாத்திங்கனா MRP விலையை காடடிலும் குறைந்தபட்சம் 30 சதவிதம் அதிகமா விக்றாங்க.சரி அதுவும் வேணாம் தண்ணிபாட்டில் வாங்கலாம்னு பாத்த கம்பெனி தயாரிப்பு எதுவும் இருக்காது அவங்க சொந்த தயாரிப்பு தான் அது விலையை கெட்டாலும் நமக்கு தலைசுத்தும்.காபி சாப்டலாம்னு மட்டும் போயிராதிங்க சென்னை சரவணபவன காட்டிலும் விலை அதிகம் உறுதியா பாதிகூட சாப்டமாட்டிங்க.


நான் நேத்து சேலத்துல இருந்து பெங்களுர் போனபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் இது.இந்த மாதிரி ஒட்டல பத்தி நல்ல தெரிஞ்சது நாளா நான் எப்பயும் ஒன்னும் சாப்டறாது இல்ல.நேத்து சேலத்துல மதியம் சாப்பாட்ட சுவை அதிகமா இருக்குனு ஒரு கட்டு கட்டிட்டேன்.வயிறு தொந்தரவு கொடுக்க அரம்பிச்சுருச்சு சரி ஒரு ஸ்பிரைட் வாங்கலாம்னு வாங்கிட்டேன் அதொடா விலை 26 தான் ஆனா அங்க வித்தது 38.ஏற்கனவே வயிறு எறிஞ்சது அவங்க அடிச்ச கொல்லையில இன்னும் அதிகமா எறிய ஆரம்பிச்சுருச்சு.எலலா பஸ்களும் இந்த சூரியா ஒட்டல தான் நிப்பாட்றாங்க.கிரிஷ்ணகிரி தாண்டுனதும் இருக்கு.


சேலம் பெங்களுர் நெடுஞ்சாலையில நிறைய நல்ல ஒட்டல்கள் இருக்கு.ஏன் அடையார் ஆனந்தபவன் கூட 4-5 இருக்கும் உண்மையிலேயே அங்கே சுவை நல்லாஇருக்கும்.விலையும் அவங்கள காட்டிலும் ரொம்ப குறைவு தான் ஆனா டிரைவர்களுக்கு ஒசி  இல்லை அதனால ஒரு சில பேருந்து தான் நிப்பாட்றாங்க.இங்கே காபி ரொம்ப நல்லா இருக்கும்.


ரயிலுல உண்மையிலயே பராவயில்ல இந்தியா முழுவதும் ஒரே விலை.இந்த மாதிரி ஒட்டல கிடைக்குற காபிய காட்டிலும் சுவையும் நல்லா இருக்கும்  விலை இன்னும் 6 ரு தான்.அனைத்து விலையும் பாக்கெட்டில் உள்ள விலை தான்.தண்ணிபாட்டில் விலை வெளியில கிடைக்குறதா காட்டிலும் கம்மி தான்.


அரசாங்கமும் இதை பத்தி எப்பயும் கண்டுக்றது இல்ல.என்னைக்கு இவங்க திருந்த போறாங்களோ.பொதுமக்கள் என்னைக்கும் பாவம்  தான்.

11 கருத்துகள்:

  1. நாமும் கூடுமானவரையில்
    தாங்கள் குறிப்பிடுவது போல
    இது போன்ற ஹோட்டலகளைத்
    தவிர்த்துவிடுதலே மிகவும் நல்லது
    அனைவரிடமும் உள்ள ஆதங்கத்தை
    மிக அழகாக பதிவு செய்துள்ளமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. மோட்டல் சைட்ல அம்மாவுக்கு பெரீ சைஸ்ல பேனர்லாம் இருந்திருக்குமே..அதுல மோட்டல்காரர் ஃபோட்டோ கூட கும்பல்ல கோவிந்தாவா இருந்திருக்குமே..கவனிச்சிங்களா?

    பதிலளிநீக்கு
  3. பொட்டலம் கட்டிட்டுக் கெளம்பறது நல்லது

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி,நான் word vrificaton நீக்கிவிட்டேன் ஜயா

      நீக்கு
  5. வீட்டுல இருந்து அல்லது பஸ் ஏறும் போது அருகில் உள்ள நல்ல ஹோட்டல்களில் வாங்கி செல்வது உடலுக்கு மிக நலம்

    பதிலளிநீக்கு
  6. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. விலை அதிகம்னு யாரும் வாங்காம இருந்துரப் போறதுல்ல... அதை அவர்கள் தெரிந்து கொண்டுதான் இப்படியெல்லாம் பண்ணுகிறார்கள்...

    பதிலளிநீக்கு