புதன், 1 ஆகஸ்ட், 2012

சிதம்பரம்-மீண்டும் நிதியமைச்சர்-தாங்குமா இந்தியா


சிதம்பரம்-மீண்டும் நிதியமைச்சர்-தாங்குமா இந்தியா


சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சாராக நியம்க்கப்பட்டுள்ளார்.வேற திறமையான ஆட்களே இல்லையா இந்தியாவில்.நரசிம்மராவால் நிதியமைச்சாராக நியமிக்கப்பட்டவர் தான் மன்மோகன்சிங்.மிக நல்ல ரிசர்வ் வங்கி கவர்னரை நாட்டின் நலனுக்காக அன்று நரசிம்மராவ் செய்ததை இன்று மன்மோகன்சிங்கால் செய்ய முடியவில்லையே ஏன்?.


2007-2008 பங்கு சந்தையில் நடந்ததை யாராலும் மறக்க முடியாது. அதற்கு முழு காரணமும் சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் தானே.ஸ்பெக்ட்ரம் ராஜா சம்பாதித்ததை காட்டிலும் எத்தனை மடங்கு மறைமுகமாக இவர்கள் சம்பாதித்து உள்ளார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிதம்பரம் மறுபடியும் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்கும் பொழுது நிதிஅமைச்சர் இது எவ்விதத்தில் தர்மம்.






நாட்டையே வெளிநாட்டிற்கு அடகுவைக்க சிதம்பரம் போல சரியான நபர் வேறு யாரும் இல்லை.ரிசர்வ் வங்கி,செபி இனிமேல் தனிச்சையாக செயல்பட முடியுமா?.பங்குசந்தையில் இனி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மாபெரும் கொண்டாட்டம் தான்.அதனால் தான் கடந்த இரண்டு நாட்களும் பங்குசந்தைக்கு சாதகமான சூழல் இல்லாத போதும் உயர்;ந்துள்ளது.


முகம் தெரியாத ரயில் டிரைவரால் ஏற்பட்ட விபத்துக்கு பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் வல்லபாய் படேலும் நிதிஸ்குமாரும்.ஆனால் சிதம்பரம் ஸ்பெக்டரம் ஊழல் இன்னும் பல ஊழலில் தொடர்பு இருந்தும் பதவி மேல் பதவிக்கு போய் கொண்டு தான் உள்ளார்.



10 வருடத்திற்கு மேல் நிதிஅமைச்சாராக இருந்து சிதம்பரம் சாதித்தது என்ன?.சென்றமுறை சிதம்பரம் நிதிஅமைச்சாராக இருந்த பொழுது தானே காமன்வெல்த் ஸ்பெக்ட்ரம் ஊழல் கொடிகட்டி பறந்தது.இன்னும் எத்தனை ஊழல்கள் நடக்குமோ.இந்தியா தாங்குமா.


மன்மோகன்சிங்,சிதம்பரம் கூட்டணி  பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும்.ஆனால் நாட்டிற்கும் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் ஒன்னும் செய்யாது.வாழ்க ஜனநாயகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக