செவ்வாய், 24 ஜூலை, 2012

இளையராஜா


இளையராஜா


இளையராஜாவை எனக்கு ரொம்ப புடிக்கும்.நான் சின்ன வயசுல அதிகமா என்னை அறியாமலே இசை பற்றி தெரியாத காலங்களில் டீ கடைகளில் அவரது பாடலை கேட்டு ரசித்து உள்ளேன்.அத்துடன் எனது பக்கத்து ஊர்காரர்னால அதிகமாக பிடிக்க ஆரம்பிச்சுருச்சு.


அவரை பற்றி பலர் சொல்றாங்க ரெம்ப தலைகணம் பிடிச்சவருனு திறமை இருக்குற இடத்துல தலைகணம் இருந்தா தப்பா.கோவில ஒரு லைட் வாங்கி கொடுத்துட்டு அந்த வெளிச்சம் மறைக்ற அளவு பெயர் போட்டுக்கிட்டு இருக்ற இந்த காலத்துல இளையராஜா நிறைய உதவிகளை விளம்பரம் இல்லாமல் செய்றாரு.


இன்னைக்கு பெத்தவங்களை முதியோர் இல்லத்துல விடுற இந்த காலத்தல அவரு அவங்க அம்மாவுக்கு சமாதி கட்டி அவருடைய நினைவு நாள்ல அன்னதானம் போட்டு அவங்க அம்மாவ சாமியா வணங்குறாரு.அதே போல அவரு மனைவி இறந்தப்பயும் அவங்க அம்மா சமாதி பக்கத்துலேயே சமாதி கட்டி இருக்காரு.


ஆனமிகத்துல ரொம்ப தீவிரமா இருக்குறது இல்லாம ஆன்மிக நெறிகளை கடைப்பிடிக்றாரு.ரஜினிக்கு ஒரு வகையில ஆன்மிக குருனு இளையராஜாவ சொல்லலாம்.ரஜினியே ஒரு பேட்டியில சொல்லி இருக்காறு.


யாரு நல்ல இசையை குடுத்தாலும் நான் ரசிச்சுகிட்டு தான் இருக்கேன் எல்லோர் இசையையும் கேக்குறேன் ஆனால் இளையராஜா இசைனா என்னையை என்ன என்னமோ செய்யுது.அதை விவரிக்க எனக்கு வார்த்தை இல்லை.ஒரு சில பாடல்களை கேட்டு அழுது இருக்கேன்.ஒரு சில பாடல்களை கேட்கும் பொழுது நாம காதலிக்கலேயே னு நினைச்சு இருக்கேன்.காலம் கடந்த பாடல்கள் எத்தனை ஆயிரம்


பள்ளி கல்லூரி காலங்களில் காதல்,.சோகம், அடிப் பாடல்கள் னு விதவிதமாக கேசட் பதிஞ்சு இருக்கேன்.நண்பர்களுக்குள்ள போட்டி வரும் யாரு கேசட்ல நல்ல பாடல்கள் இருக்குனு.ரெக்கார்டிங் சென்டர்னு அப்ப நிறைய இருக்கும். நான் பார்த்த வரை அப்ப இளையராஜா பாட்ட தான் நிறைய பேரு விரும்பி பதிச்சாங்க.


நிறைய இசைஅமைப்பாளர்கள் ,நிறைய படங்கள் வருது ஆனாலும் மனதை வருடுகிற பாடல்கள் னு பார்த்த குறைவு தான்.இளையராஜாவின் பாடல்கள் தான் இப்ப நிறைய பேரு அதிகாமா கேக்குறாங்க.எங்க தோட்டத்துல கரும்பு வெட்டுகிற கூலி ஆட்கள் மொபைல வேலை நேரம் முழுவது;ம் இளையராஜா பாட்ட தான் கேக்குறாங்க.கிழ் மட்டத்துல இருந்து மேல் மட்டம் வரைக்கும் எல்லார் வாழ்விலும் இளையராஜாவின் பாடல்கள் ஒர் பகுதியாக வந்து கொண்டு தான் உள்ளது. 

1 கருத்து:

  1. எனக்கும் கூட அவரை மிகவும் பிடிக்கும்.
    அவரது தீவிரமான ரசிகன்.
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு