வியாழன், 19 ஜூலை, 2012

டாஸ்மார்க்+ மக்கள் +எமன் =வருமானம் 18081 கோடி


டாஸ்மார்க்+ மக்கள் +எமன் =வருமானம் 18081 கோடி


1983-84 ல் ஆரம்பிக்கப்பட்ட டாஸ்மார்க்  நிறுவனம்.அந்த வருட வருமானம் 139.41 கோடி ஆகும்.2011-2012 ல் ஆண்டு வருமானம் அதிர்ச்சி அடையாமல் படியுங்கள் 18081.16 கோடி.ஏறக்குறைய 130 மடங்கு வளர்ச்சி.


YEAR
EXCISE REVENUE IN CRORE
SALES TAX IN CRORE
TOTAL IN CRORE
1983


139.41
2003-04
1657.10
1982.83
3639.93
2004-05
2549.00
2323.03
4872.03
2005-06
3176.65
2854.12
6030.77
2006-07
3986.41
3487.20
7473.61
2007-08
4764.05
4057.11
8821.16
2008-09
5755.42
4846.08
10601.50
2009-10
6740.59
5757.63
12498.22
2010-11
8115.90
6848.52
14965.42
2011-12
9956.06
8125.10
18081.16




இவை மட்டும் இன்றி பார் முலமாக வரும் வருமானம் தனி.அரசாங்கத்தால் முழுவதும் நடத்தப்படும் இந்நிறுவனத்தால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் சில


மதுரை நகரில் இருக்கும் மருத்துவ மனைகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 பேர் மரணம் அடைகின்றனர் கல்லீரல் பாதிப்பால்,அனைவரும் டாஸ்மார்க்கின் வாடிக்கையாளர்களே.இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு சரியான லாபம்.அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சோத்த பிறகே மரணம் அடைகின்றனர்.சிகிச்சைக்கு குறைந்த பட்ச செலவு 1 இலட்சம் ஆகிறது.இதற்கு போடப்படும் வரியும்  அரசாங்கத்துக்கு தனி வருமானம்.


மக்கள் வெகு தொலைவு அலைய வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தால் 2 தெருவுக்கு ஒரு கடை அரசாங்கத்தால் திறக்கப்பட்டு உள்ளது.
அரசாங்கமே குடிக்க கடையை திறந்து விட்டு குடித்து விட்டு வண்டி ஒட்டுகிறீர்கள் என்று காவல்துறை அதிகாரிகளால் குறைந்தபட்சம் 2000 ருபாய் அபாரதம வசூலிக்கின்றனர்.அந்த வருமானமும. ஆரசாங்கத்துக்கே.
இதில் காவல் துறை அதிகாரிகளின் அன்பளிப்பு தனி.


டாஸ்மார்க் கடைகளில் வாங்கும சரக்குகளுக்கு விற்பனை அதிகாரிக்கு 5 ரு அதிகம் கொடுத்தால் தான் சரக்கு கிடைக்கும்.அதனால் ஒரு நாளில. குறைந்த படசம் விற்பனை செய்பவருக்கு ரு 1000 கிடைக்கிறது.


இன்னும் எத்தனையோ வருமானம் குடிப்பதால் அரசாங்கத்துக்கு செல்கிறது.இதை வைத்து அவர்கள் எத்தனை இலவசங்கள் வேனும் என்றாலும் தரளாம்.ஆனால் அவற்றை முழுவதும் அனுபவிக்க குடிப்பவர்களால் தான் முடியாது.


வாழ்க அரசாங்கம்,பாவம் மக்கள்.
என்று தனியும் குடிப்பவர்கள் மோகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக