புதன், 18 ஜூலை, 2012

விமான டிக்கெட் குறைவான விலையில் புக் செய்ய


விமான டிக்கெட் குறைவான விலையில் புக் செய்ய


விமான டிக்கெட் ஆன்லைனில் புக் செய்வது என்பது மிகவும் எளிதானது.அத்துடன் புரோக்கரிடம் சென்று புக் செய்வதை காடடிலும் பணமும் மிகவும் குறைவாக இருக்கும்.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.பல பேர் இதை பயன்படுத்தி இருக்கலாம்.எனக்கு தெரிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன்.


விமானநேரம்,விமானநிறுவனம் மற்றும் கட்டணம் பற்றி தேட சில தளங்கள் கிழே தந்து உள்ளேன். அங்கே சென்று நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை கொடுத்து தேடுங்கள்.அனைத்து தளங்களிலும் தேடுங்கள்.ஒரு சில தளங்கள் நிறைய சலுகைகள் தரும் ஆகையால் பொறுமையாக தேடுங்கள்.நீங்கள் இத் தேடலில் முடிவு எடுத்து விட்டாலும் நீங்கள் தேர்வு செய்த விமானநிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று அங்கும் பயண கட்டணத்தை பார்த்து விட்டு எத்தளத்தில் கட்டணம் குறைவாக உள்ளது என்பதை பார்த்து புக் செய்யவும்.


டிக்கெட் புக்செய்யும் பொழுது அத் தளத்தில் கேட்கப்பட்டு இருக்கும் தகவல்களை பொறுமையாகவும் ஒன்றுக்கு இரண்டு தடவை சரிபார்த்து தகவல்களை கொடுங்கள் அவசரம் வேண்டாம்.தற்சமயம் அனைத்து விமானநிறுவனங்களும் நெட்பேங்கிங் முறையை ஏற்றுக்கொள்கிறார்கள்.


தேடலுக்கான சில தளங்கள்




நான் அதிகம் பயன்படுத்தும் தளம்.விமான கட்டணம் மற்ற தளங்களை காட்டிலும் குறைவாக இருக்கும்.அத்துடன் இவர்களின் வாடிக்கையாளர் சேவை மிக சிறப்பாக உள்ளது. அவர்களை தொடர்பு கொள்வதும் மிக எளிதாக உள்ளது.

இது ஒரு தேடல் தளம் மட்டுமே.அனைத்து தளங்களிலும் தேடி குறைவான கட்டணம் உள்ள தளத்தை நமக்கு தருகிறது


இத்துடன் விமான நிறுவனங்களின் இணையதளங்களிலும் ஆன்லைன் புக்கிங் வசதி உள்ளது.அதிலும் தேடிப்பாருங்கள்.

இந்தியாவிற்குள் நீங்கள் பயணம் மேற்கொண்டால் பயணத்தின் பொழுது அரசாங்கத்தால் அனுபதிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்று பயணத்தின் பொழுது கொண்டு செல்லுங்கள்.புக் செய்யும் பொழுது தேவை இல்லை.

வெளிநாட்டிற்கு செல்வதாக இருந்தால் புக் செய்யும் பொழுது கண்டிப்பாக பாஸ்போர்ட்டில் உள்ளது படி தகவல்களை அளியுங்கள்.பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக