வெள்ளி, 27 ஜூலை, 2012

சென்னை பள்ளி பேருந்தில் மட்டும் தான் ஒட்டையா..அரசுப்பேருந்தில் இல்லையா?


சென்னை பள்ளி பேருந்தில் மட்டும் தான் ஒட்டையா..அரசுப்பேருந்தில் இல்லையா?


சென்னையில் புதன் அன்று பள்ளி பேருந்தில் இருந்த ஒட்டை வளியாக விழுந்து பள்ளி மாணவி ஸ்ருதி பலியான விதம் மிகவும் கண்டணத்துக்குள்ளாகி பலவிதமாக விமர்ச்சனங்கள் வந்தன.பள்ளி நிர்வாகிகள் மற்றும் வாகனஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஒவ்வொரு விபத்தின் பொழுதும் மக்கள் அச்சமயம் அதைப்பற்றி பேசுவதும் கொந்தளிப்பதும் அரகாங்கம் வேகமாக நடவடிக்கை எடுப்பதும் அதன் பிறகு அதை மறந்து விடுவதும் நடந்து கொண்டு தான் வருகிறது.


பள்ளபேருந்தில் ஒட்டை இருந்தது இவ்விபத்து நடக்க போய் வெளியே தெரிந்தது.ஆனால் தமிழ்நாட்டில் இயங்கும் குறைந்த பட்சம் 20 சதவிதம் அரசாங்க பேருந்துகளில் இதை காட்டிலும் பெரிய  ஒட்டைகள் ஜன்னல்களுக்கு கண்ணாடி இல்லாமல் உள்ளது.விபத்தும் நடந்து கொண்டு தான் உள்ளது இதுக்கு யார் மேல நடவடிக்கை எடுக்றாங்க.போன மாசம் அண்ணா சாலையில அரசாங்க பேருந்து கவிழ்ந்ததுக்கு இது வரைக்கும் யார் மேல நடவடிக்கை எடுத்து இருக்காங்க. நீண்ட துரம் விரைவுப்பேருந்துல போகும் பொழுது ஜன்னல் முடமுடியாம அந்த குளிர்காத்துல போகும் பொழுது நாம படுற வேதனையை நடத்துனரிடம் சொன்ன அரசாங்கம் இருக்குறத வைச்சு ஒட்டுங்க செலவழிக்க பணம் இல்லைனு சொல்றாங்க.இதுக்கு அரசாங்கம் இது வரை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கு.


உயிர் விலை மதிப்பற்றது விபத்து நடந்த பிறகு அரசாங்கம் பணஉதவி பண்றதுக்கு விபத்து நடக்காம இருக்குறதுக்கு  நடவடிக்கை எடுக்கலாம்..பல அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிட்டு எல்லாத்துக்கும் அனுமதி கொடுத்துறாங்க ஆனால் பழி ஆகிறது பாவப்பட்ட பொதுமக்கள் தானே.என்னைக்கு எல்லாரும் உணருவாங்க.

3 கருத்துகள்:

  1. நம்மளைப் போன்றவர்களின் இப்படியான பதிவுகள் பலரிடம் சென்றடைந்தால் நிச்சயமாக இதற்கான தீர்வுகள் கிடைக்கும் நண்பா..

    தொடர்ந்தும் உங்கள் உள்ளக் குமுறல்களை எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  2. ஒருவேளை பயணிகள் யாராவது விழுந்து இறந்தால்
    இதையும் கவனிப்பார்களோ என்னவோ
    நல்ல எச்சரிக்கைப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்தால்
    பின்னூட்டம் இடுபவர்களுக்கு
    சிரமம் இல்லாமல் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நான் வேர்ட் வெரிஃபிகேசனை நீக்கிவிட்டேன்

      நீக்கு