வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ஆடிப்பெருக்கு-அன்றைய அரசர்களும் இன்றைய ஆட்சியாளர்களும்


ஆடிப்பெருக்கு-அன்றைய அரசர்களும் இன்றைய ஆட்சியாளர்களும்


தமிழர்களின் தொழில் நேர்மைக்கும் அவர்களின் அர்பணிப்பின் தன்மையின் எடுத்துக்காட்டே ஆடி 18 ம் பொங்கல் பண்டிகையும்.ஆடி18 அன்று விவசாயிகள் அனைவரும் வரும் வருடம் விளைச்சல் நன்றாக வரவேண்டும் என்றும்  மழை நன்றாக பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் அனைவரும் நலமாக வாழ கோவில்கள்  மற்றும் ஆற்றங்கறையில் கூடி வேண்டுகின்றனர்.மிக முக்கியமாக காவேரி பாசன பகுதியில் ஆடிப்பெருக்கை திருவிழாக கொண்டாடி வருகின்றனர்.


நெல் நடவு காலங்களில் தான் ஆடிப்பெருக்கை கொண்டாடுகின்றனர்.அறுவடை முடிந்ததும் தைமாதம் பொங்கல் வைத்து நல்ல விளைச்சல் குடுத்த ஆண்டவனுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.


அக்காலங்களில் அரசர்கள் ஆடிப்பெருக்கு அன்று மக்களோடு மக்களாக சேர்ந்து ஆண்டவனை வேண்டி உள்ளனர்.நாடு நலமாக இருக்கவும் நல்ல மழை வேண்டியும் உள்ளனர்.விவசாயம் செலிக்க வேண்டி தண்ணிரை சேமித்து வைக்க குளம் குட்டைகள் அதிகமாக உறுவாக்கி உள்ளனர்.அணைகள் கட்டி அனைத்து காலங்களிலும் மக்கள் நலமாக வாழ தண்ணியை சேகரித்து உள்ளனர்.மக்கள் நலமாக உள்ளனரா என்பதை சோதிக்க அவர்களே மாறுவேடத்தில் சென்று உள்ளனர்.ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் அரசர்கள் மக்களை பிள்ளைகள் போலவும் மக்கள் அரசரை தெய்வமாக பார்த்துள்ளனர்.


ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்து கொண்டுள்ளனர் என்று நான் விளக்க தேவையில்லை.இந்த வருடம் வானிலை அறிக்கையில் மழை மிகவும் குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.ஆனால் அரசாங்கம் அதை பற்றி கவலைப்படவில்லை.மத்திய அரசுக்கு கூட்டணி கட்சிகளுடன் போராடவே சரியாக போய்கிறது.மாநில முதலமைச்சர் மக்கள் என்ன ஆனால் எனக்கு என்ன என்று கொடநாடு சென்று சொத்து கணக்கை பாத்து வருகிறார்.சுதந்திரம் அடைந்த பிறகு இது வரை எத்தனை அணைகளை கட்டிஉள்ளனர்.


அனைத்து முக்கியமான அணைகளும் அரசர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் கட்டியவை தான்.நம் முன்னோர்கள் நமக்காக ஏற்படித்திய ஆறு குளம் குட்டை அனைத்தும் இன்றைய நேற்றைய ஆட்சியாளர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுதான் உள்ளது.உலகின் மிகப்பெரிய விவசாய நாடு இன்று பருப்பு வகைகள் அனைத்தையும் இறக்குமதி செய்து கொண்டுஉள்ளது.நாளை என்ன ஆகுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக