செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஈமு மோசடிகள்-மாநில அரசு என்ன செய்கிறது?


ஈமு மோசடிகள்-மாநில அரசு என்ன செய்கிறது?

இன்று செய்திதாள்கள், தொலைக்காட்சிகள்  எங்கு பார்த்தாலும் ஈமு விளம்பரங்கள் தான்.ஓவ்வொர் கம்பெனியும் போட்டி போட்டுக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாத்தி கொண்டு உள்ளனர்.முதலில் ஈமுவில் ஆரம்பித்தவர்கள் இன்று நாட்டுக்கோழி பால்பண்ணை என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை காண்பித்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

வங்கிகள்,மியுச்சல் பண்டு நிறுவனங்கள் ,பெரிய கம்பெனிகள் இவைகள் கூட அதிகபட்சம் 12 சதவிதம் தான் வட்டி அளிக்கின்றனர்.அப்படி இருக்கையில் முகவரி இல்லாத நிறுவனங்களால் எவ்வாறு 30 சதவிதம் மேல் வருமானம் தர இயலும்.இந்நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் அனுமதி பெறாமல் தான் நடைபெற்று வருகின்றன.ஆனால் விளம்பரங்கள் பக்கம் பக்கமாக கொடுத்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?சீட்டு கம்பெனிகள் நடத்தி மோசடி செய்து சென்ற பிறகு விசாரனை கமிஷன் அமைத்து 10 வருடத்திற்கு மேல் வழக்கு நடத்தி அரசாங்க பணம் வீண் ஆவது போல் இதற்கும் செய்ய போகிறதா அரசு.

தமிழகஅரசாங்கம் கால்நாடைகள் வளர்ப்புக்கேன்று தனியாக ஆராய்ச்சி நிலையம், கல்லுரிகள் எல்லாம் நடத்துகிறதே அதன் வழியாக மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தாலமே.இன்று வரை அரசாங்கத்தில் இருந்து எவ்வித எச்சரிக்கையும் இல்லை.ஓரு சில கம்பெனிகள் ஒட ஆரம்பித்து விட்டன.

ஈமுவின் தாயகம் ஆன ஆஸ்திரேலியாவில் கூட இதன் வளர்ப்பு சரியான விற்பனை வாய்ப்பு இல்லாததால் குறைந்து கொண்டு வருகிறது.அப்புறம் எவ்வாறு இவர்களால் வெற்றி அடைய முடியும்.ஈமு வளர்க்கும் ஒருவராவது ஈமு கறி சாப்பிட்டு இருப்பார்களா?.ஏதேனும் அசாம்பாவிதத்தால் ஈமு இறந்தால் எங்கே போய் இவர்கள் விற்பார்கள்.ஆடு ,மாடு, கோழி இவைகள் எதிர்பாரவிதமாக இறந்தால் உள்ளுரிலேயே மிக எளிதாக விற்க இயலும்.ஈமுவை விற்க இயலுமா?பேராசை பெருநஷ்டம் என்பது மக்களுக்கு ஏன் புரியவில்லை.

ஈமு வளர்ப்பு விளம்பரங்களுக்கு நடிப்பவர்களும் அவர்களது கிளைகளை திறந்து வைப்பவர்களும் பிரபல நடிகர் நடிகைகளே.அவர்களுக்கு எத்தனை லட்சங்கள் செலவழிப்பார்கள்.இவற்றில் உண்மையாகவே லாபம் இருந்தால் நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளம் விளம்பரத்துக்கு ஆகும் செலவு எல்லாவற்றையும் சேர்த்து அவர்கயே பெரிய பண்ணையை ஆரம்பிக்காலமே.ஏன் அவ்வாறு செய்வது இல்லை பண்ணை நடத்துவதில் லாபம் இல்லை என்ற உண்மையால் தான்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.ஆனால் அனைத்து வசதியும் உள்ள அரசு மக்களை ஏமாற விடாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தாலமே? செய்யுமா அரசு. 

9 கருத்துகள்:

  1. நம் மக்களுக்கு ஆராய்ந்து அறியும் பழக்கம் கொஞ்சம் கூட இல்லை. அதுமட்டுமல்ல, யாரவது ஆராய்ந்து சொன்னால்கூட, கேட்டுக்கொள்ளும் சொல் புத்தியும் கிடையாது. இவர்கள் அனுபவிப்பார்கள். இது ஏமாற்றுத்தனம் என்று எவ்வளவோ பேர் சொல்லியும், நமது மக்கள் அதில் முதலீடு செய்திருக்கிறார்கள். விரைவில் ஆப்பு வாங்கிகொண்டு போகவேண்டியதுதான்.

    அரசாங்கம் இதில் தலையிட்டு, ஈமு கோழி வளர்ப்பு பற்றி மக்களுக்கு விளக்கத்தை அளித்திருக்க வேண்டும். அவர்களுக்கு எத்தனையோ வேலைகள்... மீண்டும், விவசாயிகளுக்கு ஒரு சோதனை காலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு நன்றி.மக்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு.கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை எளிதாக இழந்துவிடுகிறார்கள்

      நீக்கு
  2. மோசடிகளுக்கு அரசும் உடந்தையாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கு நன்றி.அரசாங்க அதிகாரிகளுக்கு கடடிங் போய்கொண்டு இருக்கலாம்

      நீக்கு
  3. waste business !!! lot of people are affected in coimbatore areas!!!!!!!

    பதிலளிநீக்கு
  4. திருடன் திருடிய பிறகுதானே அவன் திருடன் என்பது தெரியும். அப்புறம்தானே அவன் பேரில் நடவடிக்கை எடுக்க முடியும்? கொஞ்சம் லாஜிக்கலா யோசியுங்க, பெரியகுலத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய இந்தப் பதிவையும் பாருங்கள்.

      http://swamysmusings.blogspot.in/2011/12/blog-post_17.html

      கின்னஸ் ரெகார்டு மாதிரி என்னுடைய பதிவுகளில் அதிகம் பேர் பார்த்த (1653) பதிவு இதுதான். ஆனால் என்ன பயன்?

      நீக்கு