செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தலைவர்கள் சிலைகள் எதற்கு?கலவரம் ஏற்படவா?


தலைவர்கள் சிலைகள் எதற்கு?கலவரம் ஏற்படவா?

சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்கள்,அரசியல்,சாதி தலைவர்கள்,அரசர்கள் என அனைவருக்கும் நம் நாட்டில் சிலைகள்.உண்மையிலியே சிலை வைப்பதால் யாருக்கும் எவ்வித லாபமும் இல்லை.சிலை வைப்பதால் பிரச்சினைகள் தான் அதிகமாக நடந்து வருகின்றன.

நடுரோட்டில் சிலை வைத்து போக்குவரத்து நெரிசலும், காக்கா அமர்வதற்கு தான் சிலைகள் பயன்படுகின்றன.பிறந்தநாள் அன்று மட்டும் சிலைகள் சுத்தம் செய்கின்றனர்.இதை விட பெரிய கொடுமை சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்கின்றோம் என்றும் முளைப்பாரி கொண்டு வருகின்றோம் என்றும் அன்று முழுவதும் ரோட்டை மறைத்து இவர்கள் பண்ற கொடுமை தாங்க முடியாது. கலவரம் ஏற்படும் சூலல் தான் உருவாகிறது.

எத்தலைவனும்  சாதியை பற்றி பேசவில்லைஓருவேளை எவராவது கூறி இருப்பின் அவர்கள் தலைவர்களே கிடையாது.அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக மக்களையும் தலைவர்களையும் சாதி பெயரால் பிரித்து லாபம் அடைகின்றனர்.

நேற்று யாரோ ஓருவர் அம்பேத்கார் ,இமானுவேல் சிலைகளை மதுரையில் உடைத்து உள்ளனர்.அதனால் இன்று மதுரை விமான நியைம் செல்லும் பாதை ,ரிங்ரோடு, நான்கு வழிச்சாலை இங்கு எல்லாம் சில சாதிக்கட்சிகள் மறியலில் ஈடுபட்டு  பொது மக்கள் அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இன்று எத்தனை பேர் அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டு இருப்பார்கள் .எத்தனை பேர் வேலைக்கு செல்ல முடியாமலும், தினக்கூலிக்கு செல்பவர்கள் தங்களது சம்பளத்தை இழந்தும் இருப்பார்கள்.மருத்துவமனை, பள்ளிகூடம் ,கல்லுரி ,நேர்முகத்தேர்வு என்று எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.அந்த அரக்கர்கள் 5 அறிவு படைத்த சாலைமறியல் செய்தவர்கள் இன்று என்ன சாதித்து விட்டார்கள்.

சிலையை காப்பத்தனும்னும் தலைவர் மேல உண்மைய பாசமா இருந்தாங்கனா அவங்களே காவல் காக்க வேண்டியது தானே.இல்ல சாலை மறியல் பண்றத விட்டுட்டு சிலையை சரி பண்ண வேண்டியது தானே.ஏதோ குடிகாரன் பன்னின தப்புக்கு அப்பாவி மக்கள் என்ன செயய்ய முடியும்.

அரசு பேருந்துகளுக்கு தலைவர் பெயர்கள் வைப்பதால் அடிக்கடி கலவரம் ஏற்பட்தால் தமிழக அரசு பேருந்து என பெயர் மாற்றம் செய்தது போல தமிழ்நாடடில் உள்ள அனைத்து சிலைகளையும் அப்புறப்படுத்த சட்டம் இயற்றினாலும் இல்ல அவங்க அவங்க தலைவரை அவங்க இடத்துல வச்சி காவல் காத்து காங்கனு சட்டம் போட்டால் தான் பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.போக்கு வரத்து பிரச்சினையும் தீரும்.

1 கருத்து: