திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஜெயலலிதா அறிவித்ததை கலைஞரால் அறிவிக்கமுடியுமா


ஜெயலலிதா அறிவித்ததை கலைஞரால் அறிவிக்கமுடியுமா


ப்ளக்ஸ் பேனர்கள் போஸ்டர்கள் விளம்பரங்கள் அனைத்திலும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை மட்டுமே போடவேண்டும் என்றும் அமைச்சர்கள் மற்ற தலைவர்கள் படங்களை உபயோகிக்க கூடாது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.உண்மையிலேயே வரவேற்க தகுந்த அறிவிப்பு.இதே போல் கலைஞரால் தைரியாமாக அறிவிக்கமுடியுமா?


ப்ளக்ஸ் அடிக்றோம்னு இவங்க பண்ற அட்டுழியம் தாங்க முடியலை.அமைச்சர் ,அமைச்சர் மகன்கள், தம்பிகள், மச்சினன்கள்னு இவங்களுக்கே அந்த பேனர் சரியா போயிறும்.அதோட பேனர் அடிக்றாவங்க தெரியாம மந்திரி மாவட்ட செயலாளர் சொந்தகாரங்க படத்தை போட மறந்துட்டாங்கன அவ்வளவுதான் அவங்க கட்சி பதவி.இந்த பேனர் காலச்சாரம் பெரிய கட்சியில இருந்து லெட்டர்பேடு கட்சி வரைக்கும் எல்லா இடத்துலயும் பரவிஇருக்கு.


எப்படி மெயின்ரோட்ட அடைச்சு பேனர் வச்சு இருக்காங்கனு பாருங்க





அதிமுகாவது பராவயில்லை அம்மா மட்டும் தான் அதிகாரமையம் அதனால அவங்க போட்டாவ சின்ன சைஸ்ல போட்ட போதும்.திமுக வோட நிலைமை தான் பரிதாபம்.கலைஞர் ஸ்டாலின் அழகிரி கனிமொழி படம் கண்டிப்பா போடனும் அப்புறம் மாவட்ட செயலாளர் அவரு சொந்தங்களை போட்டு பேனர் அடிச்சா தான் கட்சியில இடம்.கேப்டன் கட்சியில விஜயகாந்த் அவரது மனைவி, மச்சினன் இல்லாம பேனர் அடிக்க முடியாது.இவ்வளவு பணம் போட்டு செலவழித்து பேனர் அடிக்றவங்க அவங்க படத்தையும் நிறைய கெட்டப்ல போட்டு பண்ற கண்றாவிய என்னனு சொல்றது.


ஜெயலலிதா இனி எந்த விளபரங்களிலும் அண்ணா, எம்ஜிஆர், தனது படத்தை தவிர்த்து மற்றவர்கள் படத்தை பயன்படுத்த கூடாதுனு அறிவிச்சு இருக்காங்க கட்சி காரங்களும் ஏத்துகிட்டாங்க.இதே போல கலைஞர் அறிவிச்ச அவங்க குடும்பத்துக்குள்ளேயே பெரிய சண்டை வரும் அப்புறம் மாவட்ட செயலாளர்கள் கட்சிய ரெண்டு ஆக்கிறுவாங்க.கேப்டன் ,ராமதாஸ் இல்ல பிறதலைவர்கள் யாரும் உறுதியா அறிவிக்க மாட்டாங்க.

மொத்தத்துலயே யாருக்கும் பேனர் வைக்க கூடாதுனு சட்டம் போட்ட ரொம்ப நல்லா இருக்கும்.ரோடு கொஞ்சாமாவது சுத்தாம இருக்கும்.அதிமுக காரங்க இனி யாரும் அதிகாம பேனர் அடிக்காமாட்டாங்கனு நினைக்றேன்.ஏன்னா மாவட்ட செயலாளர் அமைச்சர்கள் படத்தை பெருசா போட்ட அவர்கள் முலம் சம்பாதிக்கலாம்னு தானே பேனரே வைக்றாங்க இப்பதான் அதற்கு வாய்ப்பு இல்லையே.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக