வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வெல்டன் சகாயம் சார்


வெல்டன் சகாயம் சார்

தமிழ்நாட்டில் பிறந்து பல இன்னல்கள்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி இன்னும் நேர்மையாக வாழ்ந்துக் கொண்டு இருக்கும் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களுக்கு நமது கோடான கோடி நன்றிகள்.

மதுரையில் ஆட்சியாளாராக இருந்த பொழுது பல வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைத்துள்ளார்.முக்கியமாக அரசியல்வாதிகளின் நிலஅபகரிப்புகளை தைரியமாக விசாரனை நடத்தியதும்,தனிமனிதனாக மாட்டுத்தவானி பேருந்து நிலையத்தின் ஆக்ரமிப்புகளை மாநகராட்சியின் எதிர்ப்பையும் மீறி மக்களின் நலனுக்காக அகற்றினார்.மதுரையில் இருந்த ரவிடியிசத்தை இவரும் SP  யுமான ஆஸ்ரா கார்க் இணைத்து அழித்தியுள்ளனர்.இன்னும் நிறைய நல்ல விசயங்களை செய்ததால் தான் சகாயத்தை பதவி மாற்றம் செய்யும் பொழுது மக்கள் போரட்டம் நடத்தி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துனர்.



மதுரையைச் சுற்றி ஏகப்பட்ட கிரானைட் குவாரிகள் உள்ளன.அனைததுக் கட்சி அரசியல்வாதிகளும் கிரானைட் தொழிற்சாலைகள் வைத்துள்ளார்கள்.கிரானைட் தொழிற்சாலை முதலாளிகள் கொடுக்கும் அதிக அளவு லஞ்ச பணத்தால் இதுவரை இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.சகாயம் அவர்கள் இக்குவாரிகளை ஆய்வு செய்ததால் தான் முதலாளிகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அவருக்கு பணிமாற்றம் வாங்கி தந்தனர்.ஆனால் சகாயம் அவர்கள் தனது பணிமாற்றத்திற்கு பிறகும் தான் ஆய்வு செய்த தகவல்கள் அனைத்தையும் அறிக்கையாக தயாரித்து அரசுக்கு 16000 கோடி இழப்பு ஏற்பட்டதாக முதல்வருக்கு அறிக்கை அளித்துள்ளார்.அறிக்கையை  பற்றி செய்திதாள்களிலும் ,தொலைக்காடசிகளிலும்விவரங்கள் வெளியானதால் தமிழக அரசு விரிவான சோதனை நடத்தி வருகிறது.

மாபெரும் செல்வாக்கு படைத்த கிரானைட் முதலாளிகளுக்கு எதிராக சகாயம் கொடுத்த அறிக்கையால் விரிவான விசாரனை நடத்திய தற்போதைய ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா(இவரும் மிக நேர்மையானவரே) 1 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கண்டு பிடித்துள்ளார்.அத்துடன் தயாநிதி அழகிரி மேல் வழக்கும் பிஆர்பி கிரானைட் தொழிற்சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.ஒரு வேளை சகாயம் அவர்கள் இவற்றை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனை வருடங்கள் அரசாங்கத்தை ஏமாற்றி   கிரானைட் முதலாளிகள் கொள்ளை அடித்துஇருப்பார்கள்.

நேர்மையான அதிகாரிகள் அனைவரும் அரசியல்வாதிகளால் பழிவாங்கப்பட்டு வருவது தமிழகத்தில் 2 ஆட்சியிலும் மாறி மாறி நடந்து கொண்டு தான் வருகிறது.இதுவரை சகாயம் அவர்கள் சந்தித்த பணிமாற்றங்கள் எந்த அதிகாரியும் சந்தித்து இருக்கமாட்டார்கள்.அனைத்து சோதனைகளையும் சந்தித்தும் தான் இருக்கும் துறையில் சிறப்பாக தனது கடமையை ஆற்றிவருகிறார்.அவரது திறமைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத கோஆப்டெக்ஸ் சேர்மனாக தற்போது பணி அமர்த்தப்பட்டுள்ளார்.அங்கும் அவர் பல சாதனைகளை செய்து கொண்டு தான் உள்ளார்.

 “If you have power, use it for the poor”  சகாயத்தின் அறையில் பொறிக்கப்பட்டுள்ள பொன்னனை வார்த்தை.





வாரஇதழில் வந்த சகாயத்தின் பேட்டியின் ஒரு பகுதி:

சில ஆண்டுகளுக்கு முன் என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை.  என் மனைவி ஆஸ்பிடல்ல துடிச்சிக்கிட்டு இருக்காள். அக்கம்பக்கத்தில் உள்ளவங்களோ 'உங்க வீட்டுக்காரர்தானே கலால் துறையில இருக்காரு. சிக்னல் காண்பிச்சாலே பிராந்தி கடைக்காரங்க லட்சம் ரூபாயினாலும் வந்து கொட்டிடுவாங்களே'னு சொன்னாங்க. ஆனா என் மனைவியோ 'லஞ்சப் பணத்தில்தான் என் குழந்தையைப் பிழைக்க வைக்கனும்னு அவசியமில்லை'ன்னு சொன்னாங்க.  புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும் அரை மணி நேரத்துல கொண்டு வந்து கொடுத்தார். உடனே குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாதநிலை  மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' – தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம். இதான் சகாயம்.

கிரானைட் மோசடி பற்றிய இவரது அறிக்கையை படித்த முதல்வர் டாஸ்மாக் வருமானத்தை காட்டிலும் அதிக வருமானம் வரும் கிரானைட் தொழிற்சாலையை அரசாங்கம் ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் டாஸ்மாக்கை அடைக்கவும் எண்ணியுள்ளதாகவும்  ஒரு வதந்தி பரவிவருகிறது.நடந்தால் அனைவருக்கும் சந்தோசமே.

தன் கடமையை சிறப்பாகவும் மக்களுக்காக உண்மையான சேவை செய்து கொண்டுவரும் உயர்திரு சகாயத்திற்கு நமது ராயல் சல்யுட்.

2 கருத்துகள்:

  1. நேர்மையான அதிகாரிகள் மாற்றப் படுவதும் ,பழி வாங்கப் படுவதும் அரசியல் ஊழல் ஆட்சிகளுக்கு விளையாட்டல்ல, பிழைப்பாகி விட்டது.
    மக்கள் இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா என்ற கேள்வி வரும்போது மறந்து விடக் கூடாது.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். இந்த மாதிரி நல்ல அதிகாரிகளை, அரசு பாராட்ட வேண்டும். ஆனால், அவர்களுக்கோ பதவி உயர்வுக்கு பதிலாக, காத்திருப்பு பட்டியலும், தண்ணி இல்ல காடும் அல்லவே பரிசாக கிடைக்கிறது?

    சகாயம் அவர்கள் பற்றிய எனது பதிவுக்கான சுட்டி கீழே:

    http://kalakalappu.blogspot.com/2012/08/ias.html

    பதிலளிநீக்கு