சனி, 15 செப்டம்பர், 2012

தங்க நகைகளின் மீது முதலீடு லாபமா?


தங்க நகைகளின் மீது முதலீடு லாபமா?

தங்கம் 2001 ல் இருந்து தொடர்ந்து ஏறுமுகமாகத் தான் உள்ளது.இந்திய கலாச்சாரத்தில் தங்க நகைகளின் தாக்கம் மிகவும் அதிகம் என்பதால் தங்கத்தின் விலையை அனைத்து மக்களும் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.தங்கத்தின் விலை ஏற்றம் நடுத்தர குடும்ப மக்களுக்கு மாபெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளதை யாரலும் மறுக்கமுடியாது.ஆனால் ஒரு மாபெரும் உண்மையை உணராமல் நகைகளின் மீது முதலீடு செய்து அனைவரும் மறைமுகமாக ஏமாந்து கொண்டு தான் உள்ளோம்.நான் ஏன் இவ்வாறு சொல்கின்றேன் என்பதற்கான விளக்கத்தை நான் கீழே தந்து உள்ளேன்.

இன்று நாம் வாங்கும் நகைகளுக்கு குறைந்த பட்சம் செய்கூலி,சேதாரம் மற்றும் அனைத்து செலவையும் சேர்த்து 10 சதவீதம் அதிகம் வைத்து தான் வாங்குகின்றோம்.நாம் வாங்கும் நகை 22 காரட் நகை தான்.இன்று மக்களால் மிகவும் அதிகமாக விரும்பப்படும் நகை மாடல்கள் எதிர்காலத்தில் விரும்பபடுவதில்லை.அன்றைய காலத்தில் உள்ள நகையின் மாடல்களாக மாற்ற பழைய நகையை போட்டு புதிய மாடலாக மாற்றுவதற்கு அன்றைய விலை நிலவரப்படி குறைந்த பட்சம் கிராமிற்கு ரூ 200 கழித்து தான் பழைய நகைகளை விலைக்கு எடுக்கின்றனர்.அப்புறம் புது நகையை செய்வதற்கும் செய்கூலி சேதாரம் வேறு தனி. குறைந்த பட்சம் நாம் தங்க நகையின் மீது முதலீடு செய்த தொகை நம்மை அறியாமலே குறைந்த படசம் 30 சதவீதம் குறைந்து விடுகிறது என்பதை யாரலும் மறுக்க முடியாது.நீங்கள் இன்று 1 லட்சம் முதலீடு செய்தால் அதன் உண்மையான விலை 70 ஆயிரம் தான்.ஓரு வேலை மாடல் மாற்ற வில்லை என்றாலும் 20 சதவீதம் குறைந்து தான்இருக்கும்.

அது மட்டும் இல்லாமல் நகையை பாதுகபாப்பது என்பது தற்சமயம் சிரமம் அதிகம்.அத்துடன் சரியாக நகையை பராமரிக்க முடியவில்லை எனில் அனைத்து நகைகளும் கருக்க ஆரம்பித்து விடும்.


தங்கத்தின் விலை ஏறிக்கொண்டு போகிறது இல்லை கொஞ்சம் கொஞ்சமாக நகையை சேர்க்கலாம் என்றவர்கள் அப்புறம் எவ்வாறு தங்கத்தை வாங்குவது அதற்கான வழிமுறைகளை எனக்கு தெரிந்த விபரங்களை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
1.E-GOLD – தேசிய பங்கு சந்தை மற்றும் மியுச்சுவல்பன்டு நிறுவனங்கள் இவற்றை வழங்குகின்றன.

2.தங்க கட்டி:அனைத்து நகை கடைகளிலும் கிடைக்கும் 24 கிராம் தங்கம்.

3.தங்கக் காசு.அனைத்து வங்கிகள் மற்றும் நகைகடைகளில் கிடைக்கும்

புதிவின் நீளம் கருதி இத்துடன் இப்பதிவை முடிக்கிறேன்.மேற்கண்ட முதலீடு திட்டங்கங்களையும் அதன் சாதக பாதகங்களையும் ஏன் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது என்பதையும்  வரும் பதிவுகளில் விபரமாக எடுத்துறைக்கின்றேன்.


1 கருத்து: