திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கல் கொண்டாட்டம் தேவைதானா?

இன்று பொங்கல், அனைவரும் பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டும் குக்கரில் பொங்கல் வைத்தும் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு கொண்டாடுகிறோம்.

ஆனால் பொங்கலை உண்மையாக,மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய விவசாயிகள் யாரும் இந்த வருடம் பொங்கலை கொண்டாட முடியாமல் வேதனையுடன் உள்ளனர்.அவர்களது வேதனையை புரிந்து கொள்ள எந்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இல்லை.தமிழக அரசு பொஙகல் என்று அனைத்தையும் இலவசமாக தந்து சரக்கு வாங்குவதற்கு என்று நினைத்தோ 100 ருபாய் பணமும் அளித்து சந்தோசப்பட்டு கொண்டுள்ளது.திமுக வோ வழக்கம் போல தை 1 புத்தாண்டு என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டு உள்ளது.பிரதமரோ விவசாயத்தை நம்பாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமையாக செல்லுங்கள் என்று கூறுகிறார்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டு ஆர்ப்பாட்ங்களோ,போரட்டங்களோ இல்லாமல், இருக்கும் தண்ணிரை வைத்து விவசாயம் செய்ய இன்றும் சென்று உள்ள விவசாயிகளை யார் காப்பாற்றுவார்கள்.படைத்த இறைவனும் இயற்கையும் கை விட்டு விட்டனர்,ஆட்சியாளர்களும் கைவிட்டனர்.எங்கே செல்வார்கள் அவர்கள்.விவசாயத்துக்கு நன்றி சொல்ல பொங்கலாம் விவசாயிகளை தவிர அனைவரும் கொண்டாடுவோம்.

பொங்கலைப் பற்றி பேஸ்புக்கில் வந்த என் மனதை பாதித்த கட்டுரை இது:

ஒரு விவசாயிக்கு மகனாய்ப்பிறந்து விசும்பியலும் விவசாயிகளுக்காக ஏதும் செய்யாத நான் பொங்கல் கொண்டாடும் தகுதியை இழந்துவிட்டேன். வெட்கித் தலைகுனிகிறேன். அத்துணை விவசாயிகளின் பாதங்கள் தொட்டு கேட்கிறேன் மன்னித்துவிடுங்கள்..

பொங்கலுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்லுறது ரொம்ப சந்தோசமாத்தான் இருக்கு. ஆனால் இந்தப் பண்டிகையை கொண்டாடும் முழு தகுதிப் படைத்த விவசாயிகள் எவருமே வாழ்த்துகளை பெற்றுக்கொள்ளும் நிலையிலோ, கொண்டாடும் மன நிலையிலோ இல்லவே இல்லை.

மாறாக திண்டாடும் நிலையில்தான் உள்ளார்கள். அவர்களது பெயரில் நாம் தான் வாழ்த்துக்கள் சொல்லிப் பினாத்துகிறோம். விவசாயம் என்பது ஒருவன் சம்பந்தப்பட்டதில்லை. அது ஒரு இனம். ஆனால் இனாமிற்கு உள்ள மரியாதைக்கூட எந்த விவசாயிக்கும் இல்லை. இது ஒன்றும் எவருக்கும் தெரியாத செய்தியில்லை.

அவர்களுக்கான நிரந்தரத் தீர்வை தராத அரசு கூட நூறு ரூபாயில் கொண்டாடச் சொல்லுகிறது. உலகுக்கே சோறுப் போட்டவங்களின் நிலை இதுதான். எவ்வளவு பெரிய பிழை செய்துக் கொண்டிருக்கிறோம் என்று இப்போது தெரியாது. அந்த நாட்களை நெருங்கிவிட்டோம்.

விளை நிலங்களை விலை நிலங்களாய் மாற்றிவிட்டு வீராப்பாய் ஒரு வாழ்த்து வேறு.

படித்த கவிதை:


மடைத்தண்ணி காணாமல்போனது
கடைத்தண்ணி தாராளமானது

எலிக்குதந்தாலும் தருவோம்
எலிக்கறி திண்பவனுக்கு தரமாட்டோம்.

பயிர்கள் வைத்த வயலில்
உயிர்கள் விழல்.

அகதி அரசியலனான்
விவசாயி அகதியானான்.

முத்துக்குமாரை தூக்கிப்பிடித்த போராளிகள்
வயல்காட்டை சுடுகாடாக்கிகொண்ட
அப்துல் ரஹீம்,ராஜாங்கம்,முருகையன்,செல்வராஜ்,ஸ்ரீதர்
ஆகியோரை  அனாதை  பிணமாக்கியதேன் ?

இவ்வளவு கேவலங்களையும் சுமக்கும் அரசு
ஒத்த பொட்டலம் அரிசியும்
ஒத்த நூறையும் தந்து
பொங்கல் கொண்டாடச் சொல்லுகிறது.

தமிழர்களின் தேசியவியாதி
மறதி  என்பதை மட்டும்
இந்த அரசும் ,வியாபாரிகளும் மறக்கவில்லை.
வெட்கக்கேடு.


1 கருத்து: